திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் உள்ள பீமன் நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளம்.

 
தமிழகம்

ஜவ்வாதுமலை பீமன் நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: ​திரு​வண்​ணா​மலை மாவட்​டம் ஜவ்​வாது​மலை​யில் பெய்த பலத்த மழை​யால் பீமன் நீர்​வீழ்ச்​சி​யில் தண்​ணீர் ஆர்ப்​பரித்​துக் கொட்டு​கிறது.

திரு​வண்​ணா​மலை மாவட்​டத்​தில் கோடைகாலம் நிறைவடைந்​தும், தொடர்ந்து வெயில் சுட்​டெரித்து வரு​கிறது. இந்​நிலை​யில் கடந்த சில தினங்​களாக மாவட்​டத்​தில் பல்​வேறு பகு​தி​களில் பரவலாக மழை பெய்து வரு​கிறது. ஜவ்​வாது​மலை மற்​றும் அதன் அடி​வார கிராமங்களில் கடந்த இரண்டு நாட்​களாக பலத்த மழை பெய்​த​தில் வறண்டு கிடந்த சுற்​றுலாத் தலமான ஜவ்​வாது​மலை பீமன் நீர்​வீழ்ச்​சி​யில் நேற்று முதல் தண்​ணீர் ஆர்ப்​பரித்​துக் கொட்​டு​கிறது.

ஜமு​னாமரத்​தூர் பகு​தி​யில் நேற்று முன்​தினம் அதி​கபட்​ச​மாக 37.20 மிமீ மழை பெய்​துள்​ளது. இதே​போல் மாவட்​டத்​தின் பல்​வேறு பகு​தி​களில் மழை பெய்​துள்​ளது. இதில், திரு​வண்​ணா​மலை​யில் 6 மிமீ, செங்​கம்​-29, போளூர்​-10.20, கலசப்​பாக்​கம் -19,தண்​ட​ராம்​பட்​டு-27.60, ஆரணி-4, சேத்​பட்​-8.40 மிமீ மழை பெய்​துள்ளது. கடந்த சில தினங்​களாக மாவட்​டத்​தின் பல்​வேறு பகு​தி​களில் பரவலாக மழை பெய்து வரு​வ​தால் விவ​சா​யிகள் மகிழ்ச்​சி அடைந்​துள்​ளனர்​.

SCROLL FOR NEXT