தமிழகம்

முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை ஆக.13-க்கு தள்ளிவைப்பு

செய்திப்பிரிவு

செங்கல்பட்டு: ​முன்​னாள் அமைச்​சர் தா.மோ. அன்​பரசன் மற்​றும் அவரது குடும்​பத்​தினர் மீதான வரு​மானத்​துக்கு அதி​க​மாக சொத்து சேர்த்​த​தாக தொடரப்​பட்​டுள்ள வழக்​கின் விசா​ரணையை ஆக. 13-ம் தேதிக்கு செங்​கல்​பட்டு மாவட்ட முதன்மை நீதி​மன்​றம் தள்​ளி​ வைத்​துள்​ளது.

தமிழகத்​தில் கடந்த 2006 முதல் 2011-ம் ஆண்டு வரையி​லான கால​கட்​டத்​தில் தா.மோ. அன்​பரசன் தொழிலா​ளர் நலத்​துறை அமைச்​ச​ராக பதவி வகித்​தார். அப்​போது, வரு​மானத்​துக்கு அதி​க​மாக சொத்​துகளை குவித்​த​தாக எழுந்த புகாரின் அடிப்​படை​யில், லஞ்ச ஒழிப்​புத் துறை போலீ​ஸார் விசா​ரணை நடத்​தினர்.

இதையடுத்​து, முன்​னாள் அமைச்​சர் தா.மோ. அன்​பரசன், அவரது மனைவி தமிழ்ச்​செல்​வி, மகன் தமிழ்​மாறன் ஆகியோர் மீது வரு​மானத்​துக்கு அதி​க​மாக சொத்து சேர்த்​த​தாக வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டது. இந்த வழக்கு செங்​கல்​பட்டு மாவட்ட முதன்மை நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் இருந்து வரு​கிறது.

இந்த வழக்கு மாவட்ட முதன்மை நீதி​மன்ற நீதிபதி சந்​திரசேகரன் முன்​னிலை​யில், நேற்றுமுன்தினம் மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, குற்​றம் சாட்​டப்​பட்ட தா.மோ. அன்​பரசன், தமிழ்ச்​செல்​வி, தமிழ்​மாறன் ஆகியோர் யாரும் நீதி​மன்​றத்​தில் ஆஜராக​வில்​லை.

அவர்​களது தரப்பு வழக்​கறிஞரும் ஆஜராக​வில்லை என்று கூறப்​படு​கிறது. இதையடுத்​து, வழக்​கின் விசா​ரணையை ஆக.13-ம் தேதிக்கு தள்​ளி ​வைத்து நீதிபதி உத்​தர​விட்​டார்.

இதனிடையே, ஆன்​லைன் மூலம் ஆஜராக அனு​மதி கோரி மனு​தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது. லஞ்ச ஒழிப்​புத் துறை​யால் பதிவு செய்​யப்​பட்ட இந்த சொத்​துக்​கு​விப்பு வழக்கு நீண்ட கால​மாக வி​சா​ரணை நடந்​து வரு​கிறது என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT