சென்னை உயர் நீதிமன்றம்

 
தமிழகம்

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தவர்கள் தேர்தலில் மீண்டும் போட்டியிட தடை கோர முடியாது: உயர் நீதிமன்றம் கருத்து

செய்திப்பிரிவு

சென்னை: எம்​எல்ஏ பதவியை ராஜி​னாமா செய்​தவர்​கள் குறிப்பிட்ட காலத்​துக்​கு தேர்​தலில் மீண்​டும் போட்​டி​யிட தடை கோர முடி​யாது என சென்னை உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் தெரி​வித்​துள்​ளனர். இடைத்​தேர்​தலுக்கு தடை கேட்ட வழக்​கில் தீர்ப்பை தள்​ளி​வைத்து நீதிப​தி​கள் உத்​தர​விட்​டுள்​ளனர்​.

மது​ராந்​தகம், தாராபுரம் சட்​டப்​பேர​வைத் தொகுதி இடைத்​தேர்​தல் அக்​.6-ம் தேதி நடை​பெற உள்​ளது. இத்​தேர்​தலுக்கு தடை விதிக்​கக் கோரி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்​கறிஞர் கே.சுதன் வழக்கு தொடர்ந்​தார். ‘தங்​களது அரசி​யல் லாபத்​துக்​காக எம்​எல்ஏ பதவியை ராஜி​னாமா செய்​து​விட்​டு, மீண்​டும் இடைத்​தேர்​தலில் போட்​டி​யிடு​கின்​றனர். அவ்​வாறு வேட்​புமனு தாக்​கல் செய்​யும்​போது, அந்த தேர்​தலுக்​கான செலவை அவர்​கள் முன்​கூட்​டியே டெபாசிட் செய்​யும் வகை​யில் உரிய நடை​முறை​களை வகுக்க வேண்​டும்.

குறிப்​பிட்ட காலத்​துக்கு அவர்​கள் மீண்​டும் தேர்​தலில் போட்​டி​யிட முடி​யாத​படி சட்​டத் திருத்​தம் கொண்டு வரவேண்​டும்’ என அவர் கூறி​யிருந்​தார்.

தலைமை நீதிபதி எஸ்​.ஏ.தர்​மா​தி​காரி, நீதிபதி ஜி.அருள்​முரு​கன் அமர்​வில் இந்த வழக்கு நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அதன் விவரம்:

மனு​தா​ரர் தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் சிங்​கார​வேலன்: அதி​முக எம்​எல்​ஏக்​கள் தங்​களது பதவியை ராஜி​னாமா செய்த சில நிமிடங்​களி​லேயே ஆளுங்​கட்​சி​யான தவெக​வில் இணைந்​தனர். அதற்கு நன்​றிக்கடனாகவே தற்​போது அதே தொகு​தி​களில் இடைத்​தேர்​தலில் ஆளுங்​கட்சி சார்​பில் போட்​டி​யிட அவர்​களுக்கு மீண்​டும் வாய்ப்பு அளிக்​கப்​பட்​டுள்​ளது. இது அவர்​களை நம்பி வாக்​களித்த மக்​களுக்கு இழைக்​கும் மாபெரும் துரோகம், அநீ​தி.

இது ஜனநாயகத்​துக்கு எதி​ரானது. எனவே, இடைத்​தேர்​தலுக்​குக் காரண​மான அவர்​களை பொறுப்​பாளி​யாக்​கி, அவர்​களிடமே தேர்​தல் செலவை வசூலிக்க வேண்​டும்.

தேர்​தல் ஆணை​யம் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் நிரஞ்​சன் ராஜகோ​பாலன்: ஜனநாயக முறை​யில் தேர்​தலை நடத்தி முடிவு​களை அறி​விப்​பது தேர்​தல் ஆணை​யத்​தின் கடமை. தேர்​தல் முடிவு​கள் வெளி​யான பிறகு தேர்​தல் ஆணை​யத்​துக்கு எந்த பங்​கும் இல்​லை. இடைத்​தேர்​தல் அறி​விப்​புக்​குப் பிறகு தொடரப்​பட்​டுள்​ள​தால் இந்த வழக்கு விசா​ரணைக்கு உகந்​தது அல்ல.

நீதிப​தி​கள்: பதவியை ராஜி​னாமா செய்த எம்​எல்​ஏக்​களிடம் இருந்தே தேர்​தல் செலவை வசூலிப்​பது, அவர்​கள் மீண்​டும் தேர்​தலில் போட்​டி​யிட தடை விதிப்​பது தொடர்​பாக எந்​தவொரு சட்​ட​மும் இல்​லாத நிலை​யில், நீதி​மன்​றம் தலை​யிட்டு எப்​படி சட்​டத் திருத்​தம் கொண்​டுவர முடி​யும். இதுதொடர்​பாக நாடாளு​மன்​றம்​தான் சட்​டம் இயற்ற முடி​யும். மேலும், இதுதொடர்​பாக புதி​தாக சட்​டம் இயற்ற வேண்​டும் என மத்​திய அரசுக்​கும் உத்​தர​விட முடி​யாது.

மக்​கள் பிர​தி​நி​தித்​து​வச் சட்​டப்படி, ஒரு எம்​எல்ஏ தனது பதவியை ராஜி​னாமா செய்​து​விட்டு மீண்​டும் தேர்​தலில் போட்​டி​யிடும்​போது, முந்​தைய தேர்​தலுக்கு ஆன செலவு விவரங்​களை வெளி​யிடு​மாறு தேர்​தல் ஆணை​யத்​துக்கு கேள்வி எழுப்​பலாம்.

ஆனால், தேர்​தலில் மீண்​டும் போட்​டி​யிடும் சம்​பந்​தப்​பட்ட வேட்​பாளர்​களிடமே அந்தசெல​வுத் தொகையை வசூலிக்க வேண்​டும் என்று கோர முடி​யாது. அதே​போல, குறிப்​பிட்ட காலத்​துக்கு அவர்​கள் தேர்​தலில் போட்​டி​யிட முடி​யாத​படி தடை வி​திக்க வேண்​டும் என்​றும் கோர முடி​யாது. இவ்​வாறு கூறிய நீதிப​தி​கள்​, வழக்​கின்​ தீர்ப்​பை தேதி குறிப்​பி​டா​மல்​ தள்​ளிவைத்​தனர்​.

SCROLL FOR NEXT