கோப்புப் படம்

 
தமிழகம்

சாலைகளில் திரியும் கால்நடைகளை பறிமுதல் செய்து ஏலம் விட வேண்டும்: வழக்குப்பதியவும் ஐகோர்ட் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: திரு​வேற்​காடு பகுதி​களில் சாலைகளில் திரியும் கால்​நடைகளால் அடிக்​கடி வாகன விபத்​து ஏற்​படுவதுடன், போக்​கு​வரத்து நெரிசலும் ஏற்​படுவ​தாகக்​கூறி வழக்​கறிஞர் காமேஷ் என்​பவர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்​மாதிகாரி மற்​றும் நீதிபதி ஜி.அருள்​முருகன் அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது நீதிப​தி​கள், சாலைகளில் கேட்​பாரின்றி சுற்​றித்​தி​ரியும் கால்​நடைகளை பறி​முதல் செய்ய தமிழக வரு​வாய் மற்​றும் பேரிடர் மேலாண்மை துறை தரப்பில் கடந்த செப்.20 அன்று அரசாணை பிறப்​பிக்​கப்​பட்​டுள்​ளது.

திரு​வேற்​காடு நக​ராட்சி நிர்​வாகமும் இது​தொடர்​பாக தீர்​மானம் நிறைவேற்​றியுள்​ளது. அதன்​படி பொது போக்​கு​வரத்​துக்கு இடையூறாகத் ​தி​ரியும் கால்​நடைகளின் உரிமையாளர்களுக்கு முதன்​முறை ரூ. 2 ஆயிர​மும், அடுத்​தமுறை ரூ. 5 ஆயிர​மும் அபராதம் விதிக்க முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

சாலைகளில் திரியும் கால்நடைகளுக்கு 48 மணி நேரத்துக்​குள் யாரும் உரிமை கோராவிட்​டால், அவற்றை பறி​முதல் செய்து ஏலம் விடலாம். கால் நடைகளின் உரிமையாளர்​களுக்கு 3 ஆண்​டுகள் வரை சிறை மற்​றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்​க சட்​டத்​தில் வழிவகை உள்​ளது.

இந்த விவகாரம் தொடர்பாக திரு​வேற்​காடு நக​ராட்சி நிர்​வாகம் பரிசீலித்து தகுந்த நட​வடிக்கை எடுக்க வேண்​டும். சாலைகளில் திரியும் கால்​நடைகளை பறிமுதல் செய்து ஏலம் விட வேண்​டும் அவைகளுக்கான பராமரிப்பு செல​வை உரிமையாளரிட​ம் வசூலிக்க வேண்​டும்.

போலீஸார் உரிமையாளர்​கள் மீது வழக்​குப் ப​திவு செய்யலாம். இந்த உத்​தரவை டிஜிபி, அனைத்து மாவட்ட ஆட்சி​யர்​களும் 4 வார காலத்​துக்​குள் அமல்​படுத்த வேண்​டும்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT