தமிழகம்

கோயில் கும்பாபிஷேகம் போன்ற நிகழ்வுகளில் சாதிய ரீதியாக அரசியல் செய்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: கோ​யில் கும்​பாபிஷேகம் போன்ற நிகழ்​வு​களில் சாதிய ரீதி​யாக அரசி​யல் செய்ய முற்​படு​பவர்​கள் யாராக இருந்​தா​லும் அவர்​கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்​டுமென அறநிலை​யத்​துறைக்​கும், போலீ​ஸாருக்​கும் உயர் நீதி​மன்ற நீதிபதி வி. லட்​சுமி நாராயணன் உத்​தர​விட்​டுள்​ளார்.

அரியலூரைச் சேர்ந்த மகேந்​திரன் என்​பவர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில், ``பெரம்​பலூரில் உள்ள மதுர​காளி அம்​மன் பொது அறக்​கட்​டளை நிர்​வாகம் தரப்​பில் மதுர காளி​யம்​மன் கோயில், கருப்​பண்ண சாமி, பெரிய​சாமி மற்​றும் பரி​வார தேவதை கோயில்​களுக்​கான கும்​பாபிஷேகம் அக்​.25-ம் தேதி நடத்த திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இதற்​காக கடந்த 2018-ம்

ஆண்டு தொடங்​கிய திருப்​பணி தற்​போது நிறைவடை​யும் தரு​வா​யில் உள்​ளது. இந்​நிலை​யில் கும்​பாபிஷேக பணி​களை பொது அறக்​கட்​டளை நிர்​வாகமே நடத்​தும் வகை​யில் பெரம்​பலூர் மாவட்ட முதன்மை நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்து அனு​மதி பெறப்​பட்​டுள்​ளது.

எனவே பிற சமு​தா​யத்​தினரின் இடையூறு ஏது​மின்றி கும்​பாபிஷேகத்தை நடத்த போலீஸ் பாது​காப்பு வழங்க வேண்​டும் எனக் கோரி​யிருந்​தார். இந்த மனு நீதிபதி வி. லட்​சுமி நாராயணன் முன்​பாக விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது, அறநிலை​யத்​துறை தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர், அந்​தக்​கோயில் கடந்த 1976-ம் ஆண்டு முதல் அறநிலை​யத்​துறை​யின் கட்​டுப்​பாட்​டில் உள்​ளது என்​றார். அப்​போது மனு​தா​ரர் தரப்​பில், கோயில் கும்​பாபிஷேகத்​தில் சாதி, மதம் மற்​றும் நிறத்​தின் அடிப்​படை​யில் பங்​கேற்​கக்​கூ​டாது என யாரும் தடுக்​கப்​பட​மாட்​டார்​கள். பட்​டியலின வகுப்​பினரும் கும்​பாபிஷேகத்​தில் பங்​கேற்க அனு​ம​திக்​கப்​படு​வர் என தெரிவிக்​கப்​பட்​டது.

அதையடுத்து நீதிப​தி, மனு​தா​ரர் கோயில் மீது உரிமை கோரி இந்த வழக்​கைத் தொடர​வில்​லை. மாறாக கோயிலை புனரமைத்து கும்​பாபிஷேகம் நடத்​துகிறோம், பாது​காப்பு கொடுங்​கள் எனக்​கூறித்​தான் வழக்கு தொடர்ந்​துள்​ளார்.

எனவே கும்​பாபிஷேக நிகழ்​வின்​போது சாதி, மதம் மற்​றும் நிறத்​தின் அடிப்​படை​யில் எவ்​வித பாகு​பாடும் காட்​டப்​பட​வில்லை என்​ப​தை​யும், கும்​பாபிஷேக நிகழ்​வில் யாரும் தடுக்​கப்​பட​வில்லை என்​ப​தை​யும் இந்து சமய அறநிலை​யத்​துறை உறுதி செய்ய வேண்​டும்.

மனு​தா​ரர் சார்ந்​துள்ள அறக்​கட்​டளை நிர்​வாகம் தவிர்த்து பிற சமூகத்​தைச் சேர்ந்த நபர்​கள் விழா​வில் பங்​கேற்க விடா​மல் தடுக்​கப்​பட்​டால் போலீ​ஸார்

அத்​தகைய விஷமத்​தன​மான செயல்​பாடு​களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்​டும்.

கும்​பாபிஷேகம் போன்ற நிகழ்​வு​களில் சாதிய ரீதி​யாக அரசி​யல் செய்ய முற்​படு​பவர்​கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும்​, என உத்​தர​விட்​டு வழக்​கை முடித்​து வைத்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT