தமிழகம்

பிற மத அடையாளத்துடன் யாரையும் கோயிலுக்குள் அனுமதிக்க கூடாது: உயர் நீதிமன்றம் தெளிவான உத்தரவு

செய்திப்பிரிவு

மதுரை: பிற மத அடை​யாளங்​களை வெளிப்​படை​யாக அணிந்​தோரை​யும், இந்து கட​வுள் மீது தங்​களுக்கு மரியாதை உண்டு என்​பதை உறுதிப்​படுத்​தாதோரை​யும் கோயில் வளாகத்​துக்​குள் நுழைய அனுமதிக்​கக் கூடாது என உயர் நீதி​மன்​றம் தெளிவாக உத்​தர​விட்​டது.

மதுரை மாவட்ட இந்து முன்​னணி ஒருங்​கிணைப்​பாளர் தங்​கம் வெங்​கடேஷ், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனுவில், ‘இந்து மதத்​தைச் சாராதோர் கோயி​லின் கரு​வறை மற்​றும் மண்​டபங்​களுக்​குள் நுழைவதைத் தடுக்​கவும், அறநிலை​யத்​துறை சட்​டப்​பி​ரிவு​களைக் கடுமையாக அமல்​படுத்​தவும், பிற மதச்​சின்​னங்​களை வெளிப்​படை​யாக அணிந்து வரு​வோரை அனுமதிக்​கும் அதி​காரி​கள் மீது குற்​றவியல், துறை ரீதி​யான நட​வடிக்​கைகள் எடுக்​கவும் உத்​தர​விட வேண்​டும்’ என கோரி​யிருந்​தார்.

இந்த மனுவை விசா​ரித்த நீதிப​தி​கள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.முருகன் அமர்வு பிறப்​பித்த உத்​தரவு: இந்து கோயில்​களில் அனைத்​துப் பிரி​வினரும் வழிபட அரசி​யலமைப்​புச் சட்​டத்​தின் 25-வது பிரிவு வழிவகை செய்​கிறது.

எந்​தவொரு இந்​து​வும் கோயிலுக்​குள் நுழைவதைத் தடுக்​கக் கூடாது என சட்​டங்​களும் உள்​ளன. ஆகமக் கோயில்​களில், சிவாச்​சா​ரியார்​கள், தீட்​சிதர்​கள், பட்​டர்​கள் அல்​லது பூசா​ரி​களாகப் பணி​யாற்​று​வோரைத் தவிர மற்ற இந்​துக்​கள் எவரும் கரு​வறைக்​குள் நுழைய முடி​யாது. கோயிலுக்கு வருபவர் பிராமணராக இருந்​தா​லும் கரு​வறை​யின் நுழைவாயி​லில்​தான் நிற்க வேண்​டும். அனைத்​துச் சமூகத்​தினரும் ஒரே நிலை​யில்​தான் உள்​ளனர்.

இந்​துக்​கள் அல்​லாதோரை​யும் கோயிலுக்​குள் அனுமதிக்க வழிவகை செய்​யும் விதி அறி​முகப்​படுத்​தப்​பட்​டபோது அதை உயர் நீதி​மன்​றம் ரத்து செய்​தது. இந்​துக்​கள் அல்​லாதோரை கோயிலுக்​குள் அனுமதிக்​கக் கூடாது என மதுரை அமர்​வும் உத்​தர​விட்​டுள்​ளது.

இருப்​பினும் சமீபகாலமாக கடுமையான விதி​மீறல்​கள் நடப்​ப​தைக் காண முடி​கிறது. மீனாட்சி அம்​மன் கோயில் அமைந்​துள்ள மதுரை மத்​திய தொகுதி எம்​எல்ஏ பத்​ருதீன் முஸ்தபா, தான் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட பிறகு கோயில் வளாகத்​துக்​குள் சென்​றார். அங்கு போதிய வசதி​கள் செய்​யப்​பட்​டுள்​ளனவா என்று ஆய்வு செய்ய தனக்கு உரிமை இருப்​ப​தாக அவர் வாதிட்​டார்.

குடமுழுக்​கின்​போது அவர் கோயில் கோபுரங்​களின் மீதும் ஏறினார். இத்​தகைய சூழலில், சனாதன தர்​மத்தை ஒழிக்க வேண்​டும் என அவர் சட்​டப்​பேரவை​யில் பேசினார். இது முரண்​பாடாக உள்​ளது.

கிறிஸ்தவ மதத்​தைச் சேர்ந்த ஓர் அமைச்​சர், இந்​துக்​கள் அல்​லாதோரிடம் கோரப்​படும் உறுதி​மொழியை அளிக்​காமலேயே திருச்​செந்​தூர் கோயிலுக்​குள் சென்​றுள்​ளார். அதேநேரத்​தில், முதல்​வர் ஜோசப் விஜய், உறுதி​மொழிப் படிவத்​தில் கையெழுத்​திட்ட பிறகு மீனாட்சி அம்​மனை வழிபட்ட சிறந்த உதா​ரணமும் கண்​முன் உள்​ளது.

இந்து சமய அறநிலை​யச் சட்​டப்​படி கோயி​லில் ஆணை​யர் முதல் கடைநிலை ஊழியர் வரை அனைவரும் இந்து மதத்​தைப் பின்​பற்​று​வோராக இருக்க வேண்​டும். அதே சட்​டத்​தில் அதி​காரி​கள்​கூட கோயில் வளாகத்​துக்​குள் நுழையும்​போது, ​​அங்​குள்ள மத நடைமுறைகள் அல்​லது வழக்​கங்​களுக்கு உரிய மதிப்​பளிக்க வேண்​டும் என்று கூறுகிறது.

இந்து அல்​லாத ஒரு​வர் விதி​யில் குறிப்​பிடப்​பட்​டுள்ள இடத்​துக்​குள் நுழைய அனுமதி அளிக்​கப்​படாததைத் தெளிவுபடுத்து​கிறது. தங்​களின் மத அடை​யாளங்​களை வெளிப்​படை​யாக அணிந்​திருப்​போரும், அந்​தந்​தக் கட​வுள் மீது தங்​களுக்கு மரியாதை உண்டு என்​பதை உறுதிப்​படுத்​தாதோரும் கோயில் வளாகத்​துக்​குள் நுழைவதற்கு அனுமதிக்​கப்​படக் கூடாது. இவ்​வாறு உத்​தர​வில் நீதிப​தி​கள் குறிப்​பிட்​டுள்​ளனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT