தமிழகம்

மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: அண்ணா சாலை​யில் உள்ள மின்​வாரி​யத் தலைமை அலு​வல​கத்​தின் கணினி பிரி​வில் 34 ஹார்டு டிஸ்க்​கு​கள் சமீபத்​தில் திருடு​போ​யின. மின்​துறை டெண்​டர், நிலக்​கரி கொள்​முதல் போன்​றவற்​றில் முந்​தைய ஆட்​சி​யில் முறை​கேடு நடந்​ததற்​கான ஆதா​ரங்​களை அழிக்​கும் சதி திட்​டத்​துடன் இவை திருடப்​பட்​ட​தாக குற்​றம்​சாட்​டிய அரசி​யல் கட்​சிகள், இது தொடர்​பாக சிபிஐ விசா​ரணை நடத்த வேண்​டும் என்​றும் வலி​யுறுத்​தின.

இதற்​கிடையே, மின்​வாரி​யம்கொடுத்த புகாரின்​பேரில், சிந்​தா​திரிப்​பேட்டை போலீ​ஸார் வழக்குபதிவு செய்து விசா​ரணை நடத்​தினர். மின்​வாரி​யத் தலைமை அலு​வல​கத்​தில் கணினிகளை மேற்​பார்​வை​யிடும் ஒப்​பந்த ஊழிய​ரான அரக்​கோணத்​தைச் சேர்ந்த கோபி​நாத்தை (31) கைது செய்​தனர். இவர் கணினி ஹார்டு டிஸ்க்​கு​களை திருடி பெங்​களூரு​வில் உள்ள ஒரு கடை​யில் விற்​பனை செய்​தது தெரிய​வந்​தது. தனிப்​படை போலீ​ஸார் பெங்​களூரு​வுக்கு சென்​று, 34 ஹார்டு டிஸ்க்​கு​களை​யும் பறி​முதல் செய்​தனர்.

இவற்றை வாங்​கிய கடை உரிமை​யாள​ரான பெங்​களூரு தெற்கு பகு​தி​யைச் சேர்ந்த முரளி மனோகரை​யும் (32) கைது செய்​தனர். இரு​வரும் சென்னை புழல் சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர். இந்​நிலை​யில், வழக்​கின் தன்​மை​, இதில் உள்ள பின்​னணியை​ கருத்​தில் கொண்​டு, விசா​ரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி மகேஷ் குமார் அகர்​வால் உத்​தர​விட்​டுள்​ளார்.

மின்​வாரிய ஒப்​பந்த ஊழிய​ரான கோபி​நாத் ஏற்​கெனவே வேறு சில நிறு​வனங்​களில் வேலை செய்​த​போதும், கணினி உதிரி பாகங்​களை திருடி விற்​றுள்​ளார். அது​போலத்​தான், தற்​போதும் மின்​வாரிய தலைமை அலு​வல​கத்​தில் இருந்த ஹார்டு டிஸ்க்​கு​களை திருடி​யுள்​ளார். அதில் உள்ள தகவல்​களை அழித்​து​விட்​டு, ரூ.75 ஆயிரத்​துக்கு விற்​பனை செய்​துள்​ளார்.

மற்​றபடி சதி திட்​டத்​துடன் செயல்​பட​வில்லை என்று விசா​ரணை​யின்​போது தெரி​வித்​துள்​ளார். எனினும், திருடப்​பட்ட ஹார்டு டிஸ்க்​கு​களில் மின்​துறை தொடர்​பான மிக முக்​கிய, ரகசிய தகவல்​கள் இருந்​த​தாக கூறப்​படு​கிறது. கைதான கோபி​நாத், பணத்​துக்​காக ஹார்டு டிஸ்க்​கு​களை விற்​ற​தாக கூறி​னாலும், இதன் பின்​னணி​யில் பெரிய சதிவலை இருக்​கலாம் என சந்​தேகம் உள்​ளது.

சிந்​தா​திரிப்​பேட்டை போலீ​ஸாரின் முதல்​கட்ட விசா​ரணை அறிக்கை அடிப்​படை​யில், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்​றப்​பட்​டுள்​ளது. விரை​வில் தனிப்​படை அமைக்​கப்​பட்டு விசா​ரணை தீவிரப்​படுத்​தப்​படும். போலீ​ஸார் சம்​பந்​தப்​பட்ட இடத்​துக்கு சென்று மீண்​டும் விசா​ரணை நடத்த உள்​ளனர். கைதான 2 பேரை காவலில் எடுத்து விசா​ரிக்​க​வும் திட்​ட​மிட்​டுள்​ளனர். சந்​தேக நபர்​களின் பட்​டியல் தயாரிக்​கப்​பட்​டு, அவர்​களிட​மும் விசா​ரணை நடத்​தப்​படும் என்று போலீஸ் தரப்​பில் கூறப்​படுகிறது.

SCROLL FOR NEXT