தமிழகம்

குட்கா வழக்கை 3 மாதத்தில் விசாரிக்க முடியாது: நீதிமன்றம்

செய்திப்பிரிவு

சென்னை: குட்கா முறைகேடு வழக்கு விசா​ரணை சிபிஐக்கு மாற்றப்​பட்​டது.

அதன்​படி, அதிமுக ஆட்சி காலத்​தில் அமைச்​சர்​களாக பதவி வகித்த சி.விஜயபாஸ்​கர், பி.வி.ரமணா, முன்​னாள் டிஜிபி டி.கே.ராஜேந்​திரன், சென்னை மாநகர முன்​னாள் காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் உள்​ளிட்ட 26 பேர் மீது சிபிஐ வழக்​குப் பதிவு செய்​தது. இந்த வழக்கு விசா​ரணை சென்​னை​யில் உள்ள எம்.பி. எம்​எல்ஏக்​கள் மீதான வழக்​கு​களை விசா​ரிக்​கும் சிறப்பு நீதி​மன்​றத்​தில் நடந்து வரு​கிறது.

இந்த வழக்​கில் விசா​ரணை அதி​காரி​யிடம் வாக்​குமூலம் அளிக்​காதவர்களை சாட்​சிகள் பட்​டியலில் இருந்து நீக்கக்கோரி மாநகர முன்னாள் காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் மனு தாக்​கல் செய்​தார். அந்த மனுவை தள்​ளு​படி செய்த உயர் நீதிமன்​றம், வழக்கை 12 வாரங்​களுக்​குள் விசா​ரித்து முடிக்க சிறப்பு நீதி​மன்​றத்​துக்கு கடந்த ஜூலை 4-ல் உத்​தர​விட்​டது.

இந்​நிலை​யில் மேலும் 3 மாதங்​கள் அவகாசம் கோரி சிறப்பு நீதி​மன்​றம் சார்​பில் உயர் நீதி​மன்​றத்​துக்கு கடிதம் அனுப்​பப்​பட்​டது. இது​தொடர்​பான வழக்கு உயர் நீதி​மன்​றத்​தில் நீதிபதி வி.லட்​சுமி நாராயணன் முன்​பாக விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது சிபிஐ தரப்​பில்,“இந்த வழக்​கில் 250-க்​கும் மேற்​பட்ட சாட்​சிகளிடம் விசாரணை நடத்​தப்​படவுள்​ளது. குற்​றச்​சாட்டு பதிவுக்கு முந்​தைய நிலை​யில் விசா​ரணை உள்​ளது” என கூறப்​பட்​டது.

அதையடுத்து நீதிபதி, இந்த வழக்​கில் 250-க்​கும் மேற்​பட்ட சாட்சிகள் உள்ள நிலை​யில், 3 மாதங்களில் எப்​படி விசா​ரித்து முடிக்க முடியும் என விசா​ரணை நீதி​மன்​றத்​துக்கு கேள்வி எழுப்பினார். பின்னர் இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நவ.6-க்கு தள்ளிவைத்தார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT