தமிழகம்

ஜிஎஸ்டி சீர்திருத்தங்களை திறம்பட செயல்படுத்த வேண்டும்: சிபிஐசி தலைவர் அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: ஜிஎஸ்டி சீர்​திருத்​தங்​கள் மற்​றும் 57-வது ஜிஎஸ்டி கவுன்​சிலின் பரிந்​துரைகள் குறித்த ஆலோ​சனைக் கூட்​டம் சென்​னையில் நடை​பெற்​றது.

இந்​தக் கூட்​டத்​துக்கு மறை​முக வரி​கள் மற்​றும் சுங்க வாரி​யத்​தின் (சிபிஐசி) தலை​வர் விவேக் சதுர்​வேதி தலைமை தாங்​கி​னார். இதில், சிபிஐசி உறுப்​பினர் (ஜிஎஸ்​டி) சஞ்​சய் மங்​கல், தமிழக அரசின் வணிக வரி​கள் ஆணை​யர் எஸ். நாக​ராஜன், சென்னை ஜிஎஸ்டி மண்​டலத்​தின் தலைமை ஆணை​யர் எஸ்​.கே. விமலா​நாதன் மற்​றும் வர்த்தக அமைப்​பு​களின் பிர​தி​நி​தி​கள், சிபிஐசி அதி​காரி​கள் கலந்து கொண்​டனர்.

இக்​கூட்​டம் இரண்டு அமர்​வு​களாக நடை​பெற்​றது. காலை​யில் நடை​பெற்ற முதல் அமர்​வில், ஜிஎஸ்டி சீர்​திருத்​தங்​கள் மற்​றும் 57-வது ஜிஎஸ்டி கவுன்​சிலின் பரிந்​துரைகள் குறித்து வர்த்தக அமைப்​பு​களின் பிர​தி​நி​தி​களு​டன் கலந்​துரை​யாடல் நடந்​தது. அப்​போது, பிர​தி​நி​தி​கள் எழுப்​பிய பல்​வேறு கேள்வி​கள் மற்​றும் சந்​தேகங்​களுக்கு அதி​காரி​கள் விளக்​கம் அளித்​தனர்.

மேலும், மத்​திய அரசு மேற்​கொண்டு வரும் ஜிஎஸ்டி சீர்​திருத்​தங்​களுக்​குப் பாராட்​டுத் தெரி​வித்த வர்த்​தகப் பிர​தி​நி​தி​கள், வர்த்​தகத்தை எளி​தாக்​க​வும், தொழில் நடை​முறை​களை மேம்​படுத்​த​வும் மேற்​கொண்டு வரும் நடவடிக்​கைகளை வரவேற்​றனர்.

இதைத் தொடர்ந்​து, மதி​யம் நடை​பெற்ற இரண்​டாவது அமர்​வில் சிபிஐசி அதி​காரி​களு​டன் கலந்​துரை​யாடல் நடத்​தப்​பட்​டது. அப்​போது பேசிய சிபிஐசி தலை​வர் விவேக் சதுர்​வே​தி, அண்​மை​யில் மேற்​கொள்​ளப்​பட்ட ஜிஎஸ்டி சீர்​திருத்​தங்​களை சீராக​வும் திறமை​யாக​வும் தடை​யின்​றி​யும் செயல்​படுத்​து​வதன் அவசி​யத்தை வலி​யுறுத்​தி​னார்.

அதே நேரத்​தில், அரசின் வரு​வாயைப் பாது​காப்​பதுடன், வர்த்தக நடவடிக்​கைகளை எளி​தாக்​கு​வதற்​குத் தேவை​யான வசதி​களை ஏற்​படுத்​தித் தரு​வதும் முக்​கி​யம் என்று அவர் சுட்​டிக்​காட்​டி​னார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT