தமிழகம்

தி.நகர் தொகுதியில் தீயாய் வேலை செய்யும் கட்சிகள்!

ஜெ.கு.லிஸ்பன் குமார்

சென்னை மாவட்​டத்​தின் தெற்கு பகு​தி​யில் அமைந்​துள்ள தொகுதி தி.நகர் எனப்​படும் தியாக​ராய நகர் தொகு​தி. சென்னை மாநகரின் இதயப் பகு​தி​யாக​வும் முக்​கிய வணிக மைய​மாக​வும் திகழ்​கிறது தி.நகர்.

கோடம்​பாக்​கம், மேற்கு மாம்​பலம், அசோக் நகர், கே.கே.நகர், எம்​ஜிஆர் நகர், வட பழனி ஆகிய முக்​கிய பகு​தி​களை இத்தொகுதி உள்​ளடக்கி உள்​ளது. முதன்மை வணிக மைய​மாக​வும் அதோடு மக்​கள் நெருக்​கம் மிகுந்த குடி​யிருப்பு பகு​தி​யாக​வும் திகழ்​கிறது தி.நகர்.

பிர​தான​மான கடைகள், ரங்​க​நாதன் தெரு, சிவா-​விஷ்ணு கோயில், பனகல் பூங்​கா, பாண்டி பஜார், வெங்​கட​நா​ராயணா சாலை போன்​றவை முக்​கிய அடை​யாளங்​களாக உள்​ளன.

தி.நகர் மற்​றும் அதைச் சுற்​றி​யுள்ள பகு​தி​களில் நாடார், முதலி​யார், நாயுடு, வன்​னியர், பிராமணர்​கள், தலித்​கள் என அனைத்து சமூக மக்​களும் வசிக்​கின்​றனர்.

          

தொகு​தி​யில் நில​வும் பிரச்​சினை​கள்

எப்​போதும் பரபரப்​பாகக் காணப்​படும் தி.நகரின் பிர​தான பிரச்​சினை​யாக இருப்​பது போக்​கு​வரத்து நெரிசல்​தான். எத்​தனை பாலங்​கள் கட்​டப்​பட்​டாலும் போக்​கு​வரத்து பிரச்​சினை இன்​னும் தீர்ந்​த​பாடில்​லை.

பேருந்​துகள் மற்​றும் மின்​சார ரயில்​களில் ஆயிரக்​கணக்​கான மக்​கள் வந்து செல்​லக்​கூடிய இப்​பகு​தி​யில் தேவை​யான கழிப்​பறை வசதி​கள் இன்​மை, வாக​னங்​களுக்கு போது​மான பார்க்​கிங் வசதி இல்​லாதது, மழைக்​காலத்​தில் சுரங்​கப்​பாதைகளில் குளம்​போல் தண்​ணீர் தேங்​கு​வது, தின​மும் டன் கணக்​கில் தேங்​கும் குப்​பைகள், ஆயிரக்​கணக்​கான வாக​னங்​களின் இயக்​கத்​தால் உரு​வாகும் காற்று மாசு​பாடு என பல்​வேறு பிரச்​சினை​களை மக்​கள் சந்​தித்து வரு​கின்​றனர்.

வேட்​பாளர்​கள் பின்​புலம்

கடந்த 1957 தொடங்கி இது​வரை நடை​பெற்ற 15 தேர்​தல்​களில் அதி​கபட்​ச​மாக திமுக 6 முறை​யும், அதி​முக 4 முறை​யும், காங்​கிரஸ் 2 முறை​யும் வெற்றி பெற்​றுள்​ளன. கடந்த 2021 தேர்​தலில் திமுக வேட்​பாள​ராக மறைந்த ஜெ.அன்​பழக​னின் சகோ​தரர் ஜெ.கருணாநிதி வெற்​றி​பெற்று எம்​எல்ஏ ஆனார்.

அத்​தேர்​தலில் அவர் 56 ஆயிரத்து 35 வாக்​கு​களும், அதி​முக வேட்​பாளர் தி.நகர் சத்யா 55 ஆயிரத்து 898 வாக்​கு​களும் பெற்​றனர். 137 வாக்​கு​கள் மட்​டுமே கூடு​தலாகப் பெற்று ஜெ.கருணாநிதி வெற்றி பெற்​றார்.

தற்​போது அவருக்கு வாய்ப்பு மறுக்​கப்​பட்​டு. ஜெ.அன்​பழக​னின் மகன் ராஜா அன்​பழக​னுக்கு போட்​டி​யிட சீட் வழங்​கப்​பட்​டுள்​ளது. அதி​முக சார்​பில் கடந்த தேர்​தலில் தோல்​வியடைந்த தி.நகர் சத்​யா, நாம் தமிழர் கட்சி சார்​பில் அனுஷா விஜய கு​மார், தவெக சார்​பில் எஸ்​.ஆனந்த் ஆகியோர் போட்​டி​யிடு​கின்​றனர்.

இத்​தொகு​தி​யில் திமுக - அதி​முக ஆகிய இரு கட்​சிகளும் சமபலத்​துடன் இருப்​ப​தாகவே அரசி​யல் பார்​வை​யாளர்​கள் கருதுகிறார்​கள். கடந்த முறை நூலிழை​யில் வெற்​றி​வாய்ப்பை இழந்த சத்​யா, கூட்​டணி கட்​சிகளின் பலத்​தால் இந்​த​முறை வெற்றி பெற்று விடலாம் என கணக்​குப் போடு​கிறார்.

அதே​நேரம் புதிய வரவான தவெக வேட்பாளர், எந்​தக் கட்​சி​யின் வாக்​கு​களைப் பிரிக்​கிறார் என்​ப​தைப் பொறுத்தே வெற்​றியைத் தீர்​மானிக்க முடி​யும் என்று கூறப்​படு​கிறது. எனவே இந்த முறை​யும் திமுக - அதி​முக இடையே போட்டி கடுமை​யாக இருக்​கும்.

எந்​தக்​கட்சி வென்​றாலும் வாக்கு வித்​தி​யாசம் மிக​வும் குறை​வாகவே இருக்​கும் என்று கணிக்​கப்​படு​கிறது. வெற்​றியை தம் வசமாக்க இரு கட்​சி​யினரும் தீயாய் வேலை செய்து வருகின்​றனர்​.

வாக்காளர்கள் விவரம்

ஆண் - 74,682

பெண் - 80,228

மூன்றாம் பாலினத்தவர் - 33

மொத்த வாக்காளர்கள் - 1,54,943

SCROLL FOR NEXT