தமிழகம்

திருப்போரூர் தொகுதியில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர் யார்?

கோ.கார்த்திக்

தமிழக சட்​டப்​பேரவை தொகு​தி​களின் வரிசைப் பட்​டியலில் 33-வ​தாக இடம் பெற்​றுள்ள திருப்போரூர் தொகு​தி, சென்​னை​யின் புறநகர் தொகு​தி​யாக முக்​கிய அடை​யாளம் கொண்​ட​தாக உள்​ளது.

கந்​தசு​வாமி கோயில், நித்​தி​யகல்​யாண பெரு​மாள் கோயில், தலசயன பெரு​மாள் கோயில், கோவளம் மசூ​தி, பல்லவ மன்​னர்​களின் சிற்​பங்​களை கொண்ட சர்​வ​தேச சுற்​றுலாதல​மான மாமல்​லபுரம் உள்​ளிட்ட முக்​கிய அடை​யாளங்​கள் உள்​ளன.

கடந்த 1967 முதல் 2011 வரை நடை​பெற்ற 11 சட்​டப்​பேர​வைத் தேர்​தல்​களில் திமுக 6 முறை​யும், அதி​முக 4 முறை​யும் மற்​றும் பாமக ஒரு​முறை என வெற்றி பெற்​றுள்​ளன. கடந்த 2016-ம் ஆண்டு நடை​பெற்ற சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அதி​முக சார்​பில் கோதண்​ட​பாணி போட்​டி​யிட்டு வெற்றி பெற்​றார்.

          

எனினும், கடந்த 2018-ம் ஆண்டு சபா​நாயக​ரால் தகுதி நீக்​கம் செய்​யப்​பட்​ட​தால், திருப்போரூர் சட்​டப்​பேரவைத் தொகுதி காலி​யானது. இதனால், 2019-ம் ஆண்டு நடை​பெற்ற இடைத் தேர்​தலில் திமுக​வின் இதய​வர்​மன் வெற்றி பெற்​றார்.

பின்​னர், 2021-ம் ஆண்டு நடை​பெற்ற சட்​டப்​பேரவை தேர்​தலில் திருப்​போரூர் தொகு​தி​யில் திமுக கூட்​டணி சார்​பில் விசிகவை சேர்ந்த எஸ்​.எஸ்​.​பாலாஜி 93,954 வாக்​கு​கள் பெற்று வெற்றி பெற்​றார். மீனவ மக்​கள் வசிக்​கும் பகு​தி​களில் அடிப்​படை வசதி​கள் மேம்​படுத்​தப்​பட​வில்​லை.

மேலும், மீனவர்​களின் நீண்ட கால கோரிக்​கை​யான தூண்​டில் வளைவு, மீன் இறங்​குதளம் உள்​ளிட்​ட​வை​கள் நிறைவேற்​றப்​ப​டா​மல் உள்​ளது. மாமல்​லபுரத்​தில் சாலை வசதி​கள், அரசு விடு​தி​கள், உள்​ளூர் மற்​றும் வெளி​நாட்டு சுற்​றுலா பயணி​களுக்கு சிகிச்சை வழங்​கும் வகையி​லான பல்​நோக்கு மருத்​து​வ​மனை போன்ற வசதி​கள் ஏற்​படுத்​தப்​ப​டா​மல் உள்​ளது.

இதுதொடர்​பாக, இப்​பகுதி பொது​மக்​கள் ஒவ்​வொரு தேர்​தலிலும் வலி​யுறுத்தி வரும் நிலை​யிலும், இதுவரை நிறை வேற்றப்படவில்லை. திருப்​போரூர் பேரூ​ராட்சி மற்​றும் அதைச் சுற்​றி​யுள்ள ஊராட்​சிகள் அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​கள் மற்​றும் தொழில் நிறு​வனங்​கள் என வேக​மாக வளர்ச்​சி​யடைந்து வரும் நிலை​யில், குடிநீர் வசதி​கள் மேம்​படுத்​தப்​ப​டா​மல் உள்​ளது.

மேலும், கிராமப் பகு​தி​களில் உள்ள விளை நிலைங்​களின் ஆழ்​துளை கிணறுகளின் மூலம் குடிநீர் பெற்று புறநகர்​களில் லாரி​களில் வழங்​கப்​படு​கிறது. இதனால், விவ​சா​யத்​துக்கு தண்​ணீர் பற்​றாக்​குறை ஏற்​பட்​டுள்​ளது. அதனால், நெம்​மேலி​யில் உள்ள கடல்​நீரை குடிநீ​ராக்​கும் ஆலையை மேம்​படுத்​தி, திருப்​போரூர் மற்​றும் புறநகர் பகு​தி​களுக்கு குடிநீர் வழங்க வேண்​டும் என்​பது நீண்ட கால கோரிக்​கை​யாக உள்​ளது.

திருக்​கழுக்​குன்​றத்​தில், மலைமீது அமைந்​துள்ள வேதகிரீஸ்​வரர் மலைக்​கோ​யிலை பக்​தர்​கள் கிரிவலம் வரு​வ​தால், கிரிவலப்​பாதையை சீரமைத்து பத்​கர்​கள் தங்​கும் விடு​தி​களை அமைக்க வேண்​டும் மற்​றும் ரோப்​கார் திட்​டத்தை தாமதப்​படுத்​தாமல் செயல்​படுத்த வேண்​டு்ம் என்​பது உள்​ளூர் மக்​களின் கோரிக்​கை​யாக உள்​ளது.

மாமல்​லபுரம் மற்​றும் கடப்​பாக்​கம் அருகே மானிய விலை டீசல் நிலை​யம் அமைக்க வேண்​டும் மற்​றும் கான்​கிரீட் வீடு​கள் அமைத்து தரவேண்​டும் என மீனவர்​கள் வலி​யுறுத்தி வரு​கின்​றனர். தொகு​தி​யில் ஆதி​தி​ரா​விடர் மற்​றும் வன்​னியர் அதி​கள​வில் வசிக்​கின்​றனர்.

தேர்​தலில் வெற்​றி, தோல்​வியை நிர்​ண​யிப்​பவர்​களாக இவர்​கள் உள்​ளனர். பிற இனத்​தவர்​களும் கணிச​மாக உள்​ளனர். இந்த தேர்​தலில் அதி​முக கூட்​டணி சார்​பில் பாமக வேட்​பாள​ராக வழக்கறிஞர் பாலு போட்​டி​யிடு​கிறார்.

அதே​போல், திமுக கூட்​டணி சார்​பில் விசிகவை சேர்ந்த பன்னீர்​தாஸ் வேட்​பாள​ராக போட்​டி​யிடு​கிறார். மேலும், நாம்​தமிழர் கட்​சி​யின் சார்​பில் அம்​பேத்​ராஜன், தமிழக வெற்​றிக்​கழகம் சார்​பில் விஜய​ராஜ் ஆகியோர் போட்​டி​யிடு​கின்​றனர். தொகு​திக்கு அனை​வருமே புது​முக​மாக உள்​ளனர். இதனால் இத்​தேர்​தலில் யாருக்கு வெற்றி கிடைக்​கும் என்​பதை கணிக்க முடியாத நிலை உள்​ளது.

வாக்காளர்கள் விவரம்

ஆண் - 1,01,308

பெண் - 1,03,975

மூன்றாம் பாலினத்தவர் - 61

மொத்த வாக்காளர்கள் - 2,05,344

SCROLL FOR NEXT