`இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘பெண் இன்று’ சார்பில் சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகம் திருவான்மியூர் வளாகத்தில் நேற்று நடைபெற்ற மகளிர் திருவிழாவின்போது போட்டிகளில் பங்கேற்ற வாசகிகள். | படங்கள்: எஸ்.சத்தியசீலன் |

 
தமிழகம்

பாரதியின் சமத்துவக் கருத்துகளை நினைவில் கொள்ள முன்னாள் ஏடிஜிபி வனிதா அறிவுரை

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் ‘பெண் இன்று’ சார்பில் மகளிர் திருவிழா கோலாகலம்

செய்திப்பிரிவு

சென்னை: “பட்​டங்​கள் ஆள்​வதும் சட்​டங்​கள் செய்​வதும் பாரி​னில் பெண்​கள் நடத்த வந்​தோம்; எட்​டும் அறி​வி​னில் ஆணுக்​குப் பெண் இங்கே இளைப்​பில்லை காண்​ என்று கும்​மியடி” என பாரதி கண்ட கனவின்​படி இன்​றைய தலைமுறை பெண்​கள் பார் முழு​வதும் வியக்​கும் வகை​யில் சாதனைகளை படைத்து வரு​கின்​றனர்.

அவர்​களை அடை​யாளப்​படுத்​தும் வித​மாகவும், பெண்​களைப் போற்​றும் வகை​யிலும் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘பெண் இன்று’ சார்​பில் மகளிர் திரு​விழா சென்னை திரு​வான்​மியூரில் உள்ள வேல்ஸ் பல்​கலைக்​கழக வளாகத்​தில் நேற்று கோலாகலமாக நடை​பெற்​றது.

இந்த விழா​வில் துணை செய்தி ஆசி​ரியரும், ‘பெண் இன்று’ சிறப்பு பக்க பொறுப்​பாள​ரு​மான பிருந்தா சீனிவாசன் வரவேற்​புரையாற்​றினார்.

சிறப்பு விருந்​தின​ராகப் பங்​கேற்ற முன்​னாள் ஏடி​ஜிபி வனிதா, திரு​வான்​மியூர் வேல்ஸ் பல்​கலைக்​கழக கல்வி மற்​றும் நிர்​வாகத்​துக்​கான கேம்​பஸ் இயக்​குநர் சசிரேகா, ரெயின்போ குழந்​தைகள் நல மருத்​து​வ​மனை​யின் மூத்த மருத்​துவ நிபுணர் ஷீலா ஆகியோர் குத்​து​விளக்கு ஏற்றி விழாவைத் தொடங்கி வைத்​தனர்.

தமிழக அரசின் கலை இளமணி விருது பெற்ற கடலூரைச் சேர்ந்த மோகன சங்​கரி​யின் பரதநாட்​டியம், கண்​களுக்கு விருந்து படைத்​தது.

இந்த நிகழ்ச்​சி​யில் முன்​னாள் ஏடி​ஜிபி வனிதா பேசிய​தாவது: சமூகத்​தில் பெண்​கள் நடத்​தப்​படும் விதம், அதற்கு அவர்​கள் அளிக்​கும் எதிர்​வினை ஆகியவை பெண்​களின் இருப்​பையும் அடை​யாளத்​தையும் தீர்​மானிப்​ப​தில் முக்​கியப் பங்கு வகிக்​கிறது. பெண்​கள் சக்​திவாய்ந்​தவர்​களாக இருக்க வேண்டு​மெனில் படிக்க வேண்​டும்.

நேற்று இருந்​ததைவிட இன்று ஒரு படி முன்​னேறிய மனித​ராக இருக்க வேண்​டும். வாசிப்பு மூலம் அறிவைப் பெருக்​கிக்​கொள்ள முடியும்.

செய்​தித்​தாள்​களைத் தொடர்ந்து படிப்​பது அவ​சி​யம். தலைப்​புச் செய்​தி​களை மட்​டும் பார்ப்​ப​துடன் நிறுத்​திக்​கொள்​ளாமல், செய்​தி​களின் பின்​னணி​யையும் தெரிந்​து​கொள்ள வேண்​டும்.

கணினி, செயற்கை நுண்​ணறிவு, புதிய தொழில்​நுட்​பங்​கள் ஆகியவை வளர்ந்து வரும் காலத்​தில், தொழில்​நுட்​பத்​தைப் பயன்​படுத்​தத் தெரிந்​திருப்​பது மட்​டுமே அறிவாகி​விடாது. நாம் என்ன தகவலைப் பெறுகிறோம், அதை எப்​படிப் புரிந்​து​கொள்​கிறோம் என்​ப​தும் முக்​கியம்.

பெண்​கள் வீட்​டைக் கவனிப்​ப​தில் முக்​கியப் பங்கு வகிக்​கிறார்​கள். குடும்​பத்​தில் வேலைகளைப் பகிர்ந்​து​கொள்​வதுடன், ஒவ்​வொரு​வரின் திறமைக்​கும் விருப்​பத்​துக்​கும் ஏற்ற பொறுப்​பு​களை வழங்க வேண்​டும். வீட்​டுப் பணிகளுக்கு இடை​யில் பெண்​களுக்​கெனத் தனிப்​பட்ட நேர​மும் சிந்​திப்​ப​தற்​கான வாய்ப்​பும் இருக்க வேண்​டும்.

மகளிர் திருவிழாவில் பங்கேற்ற வாசகிகளில் ஒரு பகுதியினர்.

குழந்தை பெற்​றுக்​கொள்ள வேண்​டும், குடும்​பத்​தைப் பேண வேண்​டும் என்ற சமூக அழுத்​தங்​களால் பெண்​கள் பல்​வேறு நிர்​பந்​தங்​களை எதிர்​கொள்​கிறார்​கள். பெண்​கள் தங்​கள் உடை, வாழ்க்கை முறை, தனிப்​பட்ட முடிவு​கள் ஆகிய​வற்​றில் சுய​மாக முடிவெடுக்க வேண்​டும்.

அதேநேரம், குடும்​பத்​தினரிடையே உரையாடலும் பரஸ்பர புரிதலும் இருக்க வேண்​டும். எதையும் ஏன், எதற்கு, எப்​படி என்று கேள்வி கேட்​கும் சிந்​தனையைத் தூண்​டும் கல்​வியே பயனுள்​ள​தாக இருக்​கும்.

பாரதி​யார் பெண்​களின் சமத்​து​வம் குறித்து அக்​காலத்​திலேயே வலியுறுத்​திய கருத்​துகளை​யும் நினைவில் கொள்ள வேண்​டும். இவ்​வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, வேல்ஸ் பல்​கலைக்​கழக கல்வி மற்​றும் நிர்​வாகத்​துக்​கான கேம்​பஸ் இயக்​குநர் சசிரேகா பேசிய​தாவது: பொது இடங்​களில் சுதந்​திர​மாக நட​மாடுவதற்​கான உரிமையும் வாய்ப்​பும் பெண்​களுக்​கும் இருக்க வேண்​டும்.

இரவு நேரங்​களில் தேநீர்க் கடைகள் உள்​ளிட்ட பொது இடங்​களில் ஆண்​கள் இயல்​பாக கூடும் நிலை​யில், பெண்​களைக் காண்​பது அரிதாக உள்​ளது. பெண்ணை மதிக்​கும் குடும்​பம்​தான் சிறப்​பாக இருக்​கும்.

கடலூர் செம்மண்டலம் பகுதியைச் சேர்ந்த சிறுமி மோகன சங்கரி பரத நாட்டியம் ஆடினார்.

குடும்​பத்​தின் வளர்ச்​சி​யில் பெண்​களின் பங்​களிப்பு முக்​கிய​மானது. அதேபோல, பெண்​களுக்கு எதிரான வன்​கொடுமை​களைத் தடுப்​ப​தற்​கான மாற்​றம் ஒவ்​வொரு​வரிடம் இருந்​தும் தொடங்க வேண்​டும். அந்த மாற்​றம் மனதளவில் ஏற்​றுக்​கொள்​ளப்​பட வேண்​டும்.

பெண்​களின் வாழ்க்​கைப் பயணம் இனிமையானதாக இருந்​தா​லும், பல சவால்​களை​யும் கொண்​டது. அந்த பயணத்​தில் தன்​னம்​பிக்​கையுடன் வாழ்​வதுடன், வாழ்க்​கை​யின் நிறைவில், மன​நிறைவுடன் வாழ்ந்​தோம் என்ற உணர்​வைப் பெற வேண்​டும்.

இவ்​வாறு பேசினார். இதைத் தொடர்ந்து, உதயம் பருப்பு வகைகளைப் பயன்​படுத்தி சுவை​யாக சமைத்​துக்​கொண்டு பெருந்​திரளாக வந்த வாசகி​களுக்கு பரிசுகள் வழங்​கப்​பட்​டன.

‘மகளிர் திரு​விழா’வுக்கே உரித்​தான உற்​சாக போட்​டிகளும், பரிசுகளும் கொண்​டாட்​டத்​துடன் தொடங்​கியது. வயது பேதமின்றி 18 வயது முதல் 85 வயது வரை உள்ள வாசகி​களும் நிகழ்​வில் பங்​கேற்​றனர். பல்​வேறு போட்​டிகளில் வெட்​கம் மிளிர இளம்​ பெண்​களுக்கு போட்​டி​யாக, மூத்த பெண்​களும் பங்​கேற்​றனர்.

முன்னாள் ஏடிஜிபி வனிதா, டாக்டர்.ஷீலா, முனைவர் வி.சசிரேகா

வாசகி​கள் பங்​கேற்ற ஃபேஷன் ஷோ, பலூன் உடைத்​தல், கயிறு இழுத்​தல், பாட்​டுக்கு பாட்டு, நடனம் உள்​ளிட்ட பல்​வேறு போட்​டிகள் நடத்​தப்​பட்டு, அனைவருக்​கும் பரிசுகள் வழங்​கப்​பட்​டன. நிகழ்ச்​சி​யின் ஆரம்​பம் முதல் நிறைவு வரை தொகுப்​பாளினி தேவி கிருபாவின் கல​கலப்பு பெண்​களை உற்​சாகப்​படுத்​தியது.

இந்த நிகழ்ச்​சியை உதயம் இட்லி அரிசி, பருப்பு வகைகள் நிறு​வனத்​துடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நடத்​தி​யது. மேலும், லலிதா ஜுவல்​லரி, ஸ்ரீஐஸ்​வர்யா சாரீஸ், ரெபியூட் வாட்​டர், மஹாத்ரி ஃபுட்ஸ், ஹெல்த் பாஸ்​கெட், சத்யா ஏஜென்​சீஸ், ருச்சி ஊறுகாய், அட்​வென்​சர் மீடியா ஹவுஸ், வர்த்​த​மானன் பதிப்​பகம், சௌபாக்யா என்​டர்​பிரைசஸ், காட்​டன் ஹவுஸ், டோம்ஸ் ஸ்டேஷனரி, மாலாஸ் ஃப்ரூட்ஸ் ஆகிய நிறு​வனங்​களும் நிகழ்ச்​சியை இணைந்து வழங்​கின.

நிகழ்ச்​சி​யின் டிவைன் பார்ட்​னர் கிரி, ஹெல்த் பார்ட்​னர் ரெயின்போ சில்​ரன்ஸ் ஹாஸ்பிடல்ஸ், வென்யூ பார்ட்​னர் வேல்ஸ் பல்​கலைக்​கழகம் - திரு​வான்​மியூர் வளாகம், பிவெரேஜ் பார்ட்​னர் கோத்​தாஸ்காபி உள்​ளிட்ட நிறு​வனங்​களும் இணைந்து பங்​காற்​றின.

மேலும், போட்​டிகளின் வாயி​லாக இரண்டு மகளிர் பம்​பர் பரிசை தட்டி சென்​றனர். நிகழ்​வில் பங்​கேற்ற அனைவருக்​கும் அறுசுவை உணவு அளிக்​கப்​பட்​டதுடன், வாசகி​களுக்கு நிச்​சயப்​பரிசும் வழங்​கப்​பட்​டன.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT