தமிழகம்

உயரமான கட்டிடங்களுக்கான அதிகபட்ச வரம்பு 19.5 மீட்டர்: விதிகளில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு

அடுக்குமாடி குடியிருப்புகளில் சார்ஜிங் வசதி கட்டாயம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் உயர​மான கட்டிடங்களுக்கான அதி​கபட்ச உயர வரம்பை 18.30 மீட்​டரில் இருந்து 19.50 மீட்​டராக உயர்த்தி, ஒருங்​கிணைந்த கட்​டிட விதி​களில் தமிழக அரசு திருத்​தம் செய்​துள்​ளது.

இது​குறித்து வீட்​டுவசதித் துறை செயலர் கிர்​லோஷ்குமார் வெளி​யிட்ட அரசாணை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் குடி​யிருப்பு மற்​றும் குடி​யிருப்பு பயன்​பாட்​டுக்​கான மண்​டலப் பகுதி​யில் 12 மீட்​டர் அகலமான சாலை இருந்​தால் அதை ஒட்​டிய மனைகள் வணிகப் பயன்​பாட்​டுக்கு உரிய​வை​யாகக் கருதப்​படும்.

சென்னை பெருநகரப் பகுதிக்கு வெளியே 9 மீட்​டர் சாலை போது​மானது. சாலை அகலம் தொடர்ச்​சி​யாக 100 மீட்​டர் நீளத்​துக்கு இருக்க வேண்​டும்.

கருத்​தரங்க அரங்​கம், பன்​னடுக்கு வாகன நிறுத்​து​மிடம், குளிரூட்​டப்​பட்ட ஒரு திரை கொண்ட திரையரங்​கங்​கள் அமைக்க சாலை அகலம் 12 மீட்​டராகவும், மாநக​ராட்​சிகள், நக​ராட்​சிப் பகுதி​களில் கண்​காட்சி அரங்​கங்​கள், திரு​மண மண்​டபங்​கள் அமைக்க 15 மீட்​டர் அகலமும், இதர பகுதி​களில் 12 மீட்​டர் அகலமும் இருக்க வேண்​டும்.

ஸ்​டார் ஓட்​டல்​கள் மற்​றும் பல திரை கொண்ட மல்டி பிளக்ஸ் திரையரங்​கு​கள், மால்​கள் அமைக்க 18 மீட்​டர் அகலம் கொண்ட சாலை​யாக இருக்க வேண்​டும். மேலும், 12, 15, 18 மீட்​டர் சாலைகளுக்கு 2.0, 2.5, 3.25 என தளப்​பரப்பு குறியீடு (எஃப்எஸ்ஐ) நிர்​ணயம் செய்​யப்​பட்​டுள்​ளது.

விடுதி​களில் ஒவ்​வொரு கார் நிறுத்​து​மிடத்​துக்​கும் ஓட்​டுநர்​களுக்கு ஒரு படுக்கை வசதி வழங்க வேண்​டும். ஐ.டி. அலு​வல​கங்​களில் ஒவ்​வொரு 75 சதுர மீட்​டருக்​கும் ஒரு கார் இடம் தேவை.

50-க்​கும் மேற்​பட்ட வீடுகள் உள்ள கட்​டிடங்​களில் மின்​சார வாக​னங்​களுக்​கான விரைவு சார்​ஜிங் வசதிக்கு ஏற்​பாடு செய்ய வேண்​டும்.

மாற்​றுத் திறனாளி​களுக்​கான வசதி​கள் முடிக்​கப்​பட்ட பிறகே நிறைவுச் சான்​றிதழ் வழங்​கப்​படும். நீச்​சல் குள விதி​களும் திருத்​தப்​பட்​டுள்​ளன. இது​த​விர, கட்​டிடங்​களுக்கு பக்​கவாட்​டில் விடப்​படும் செட்​பேக் தொடர்​பான விதி​களி​லும் திருத்​தங்​கள் செய்​யப்​பட்டுள்ளன.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT