தமிழகம்

3-வது பிரசவத்துக்கு 12 வாரங்கள் விடுப்பு வழங்கும் அரசாணை உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது: ஐகோர்ட்

செய்திப்பிரிவு

சென்னை: மூன்​றாவது பிரசவத்​துக்​கும் ஓராண்டு விடுப்பு வழங்க வேண்​டுமென்​றும், 12 வாரங்​கள் மட்​டும் விடுப்பு வழங்​கும் அரசாணை உச்ச நீதி​மன்ற மற்​றும் உயர் நீதி​மன்​றத் தீர்ப்​பு​களுக்கு எதி​ரானது என்​றும் உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் கருத்து தெரி​வித்​துள்​ளனர்.

விழுப்​புரம் மாவட்​டம் திண்​டிவனம் மோட்​டார் வாகன விபத்து வழக்​கு​களுக்​கான இழப்​பீட்டு தீர்ப்​பா​யத்​தில் பணி​யாற்​றும் சாய்​நிஷா என்​பவர் தனது 3-வது பிரசவத்​துக்​காக 2026 பிப்​ர​வரி முதல் 2027 பிப்​ர​வரி வரை மகப்​பேறு விடுப்பு வழங்​கக்​கோரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிப​தி​யிடம் விண்​ணப்​பித்​தார்.

ஆனால் அதை ஏற்க மறுத்த மாவட்ட முதன்மை நீதிப​தி, 3-வது பிரசவத்​துக்கு 12 வாரங்​கள் மட்​டுமே விடுப்பு வழங்க முடி​யும் என்ற அரசாணைப்​படி ஏப்​ரல் மாதத்​துக்​குள் பணி​யில் சேரும்​படி சாய் நிஷாவுக்கு உத்​தர​விட்​டார்.

வலி​யும், வேதனை​யும் இதை எதிர்த்து சாய் நிஷா சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தார். இந்த வழக்கை விசா​ரித்த நீதிப​தி​கள் ஆர்​.சுரேஷ்கு​மார், என்​.செந்​தில்​கு​மார் ஆகியோர் அடங்​கிய அமர்​வு, 3-வது பிரசவ​மும் முதல் இரு பிரசவங்​களைப் போல வலி​யும், வேதனை​யும் அடங்​கியது​தான்.

இதைக் கருத்​தில் கொண்டே உச்ச நீதி​மன்​ற​மும், உயர் நீதி​மன்​ற​மும் அரசு பெண் ஊழியர்​களின் மூன்​றாவது குழந்​தைக்​கும் ஓராண்டு காலம் மகப்​பேறு விடுப்பு வழங்க உத்​தர​விட்​டுள்​ளது.

எனவே மனு​தா​ரருக்கு ஓராண்டு காலத்​துக்கு மகப்​பேறு விடுப்பு வழங்க வேண்​டும் என விழுப்​புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிப​திக்கு உத்​தர​விட்​டுள்​ளனர்.

3-வது பிரசவத்​துக்கு 12 வாரங்​களுக்கு மட்​டும் விடுப்பு வழங்க வேண்​டுமென்ற அரசாணை உச்ச நீதி​மன்​றம் மற்​றும் உயர் நீதி​மன்​றத் தீர்ப்​பு​களுக்கு எதி​ரானது. அரசின் இந்த அரசாணை நீதித்​துறையை எவ்​விதத்​தி​லும் கட்​டுப்​படுத்​தாது என்​றும் உத்​தர​விட்​டுள்​ளனர்.

SCROLL FOR NEXT