தமிழகம்

விவசாயிகளின் கேள்விக்கு காணொலியில் பதில்: அரசின் புதிய திட்டம் தொடக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: விவசாயிகளுக்கு வழி​காட்​டு​வதற்​காக ‘கலந்​துரை​யாடல் மூலம் விரி​வாக்​கம்’ எனும் புதிய திட்​டத்​தை, வேளாண்மை துறை அமைச்​சர் வினோத், சென்​னை​யில் தொடங்கி வைத்​தார்.

தமிழக வேளாண்மை துறை ‘கலந்​துரை​யாடல் மூலம் விரி​வாக்​கம்’ எனும் புதிய திட்​டத்தை அமல்​படுத்​தி​யுள்​ளது. இதன்​மூலம், காணொலி வாயி​லாக விவ​சா​யிகளின் கேள்வி​களுக்கு பதிலளித்​து, அவர்​கள் பிரச்​சினை​களுக்கு ஒரே தளத்​தில் தீர்வு வழங்க மாநில அளவி​லான நிபுணர் குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​தக் குழு​வில் வேளாண் மற்​றும் அது​சார்ந்த தோட்​டக்​கலை, மீன்​வளம், பால்​வளம், வேளாண்​மைப் பொறி​யியல், கால்​நடை பராமரிப்​புசென்னை மண்டல வானிலை ஆய்வு மையம், வங்கி உட்பட பல்​துறை​களின் நிபுணர்​களும் இருப்​பார்​கள்.

இந்த திட்​டத்​தின் தொடக்க விழா, சென்னை தலை​மைச் செயல​கத்​தில் நேற்று நடை​பெற்​றது. இதில் சிறப்பு விருந்​தின​ராக பங்​கேற்ற வேளாண்மை துறை அமைச்​சர் ர.வினோத் திட்​டத்தை தொடங்கி வைத்​து, காணொலி வாயி​லாக பல்​வேறு மாவட்​டங்​களின் விவ​சா​யிகளு​டன் கலந்​துரை​யாடி​னார்.

இந்நிகழ்​வில், வேளாண்மை துறை செயலர்பொ.சங்​கர், இயக்​குநர் க.வீ.​முரளிதரன் மற்​றும் துறை​சார்ந்த அலு​வலர்​கள் மற்​றும் விவ​சா​யிகள் (காணொலி வாயி​லாக) பங்​கேற்​றனர்​.

SCROLL FOR NEXT