தமிழகம்

தமிழகத்தில் 32 மாவட்டங்களில் நூலக அலுவலர் பணியிடங்கள் காலி: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

செய்திப்பிரிவு

மதுரை: தமிழகத்​தில் 32 மாவட்​டங்​களில் மாவட்ட நூலக அலு​வலர் பணி​யிடங்​கள் காலி​யாக உள்​ளன. இந்த காலி​யிடங்​களில் விரை​வில் தகு​தி​யானவர்​கள் நியமிக்​கப்​படு​வர் என, உயர் நீதி​மன்​றத்​தில் அரசு தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.

மதுரையை சேர்ந்த உமாமகேஷ், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு: மாவட்ட நூலக அலு​வலர் பணி​யிடங்​களை நிரப்​புவதற்​கான விதி​களில் தமிழக அரசு சில மாற்​றங்​களை கொண்​டு​வந்​துள்​ளது.

          

அதன்​படி, மாவட்ட நூலக அலு​வலர் பணி​யிடங்​களில் 25 சதவீத பணி​யிடங்​கள் டிஎன்​பிஎஸ்சி நேரடி நியமனம் வழி​யாக​வும், எஞ்​சிய பணி​யிடங்​கள் நூல​கத் துறை​யில் பணி​யாற்​றும் முதல்​நிலை நூல​கர்​கள் அல்​லது அண்ணா நூற்​றாண்டு நூல​கம் மற்​றும் கலைஞர் நூற்​றாண்டு நூல​கத்​தில் பணி​யாற்​றும் அலு​வலர்​களைக் கொண்டு நிரப்​பப்​படும் எனக் கூறப்​பட்​டுள்​ளது.

நேரடி நியமனத்​துக்​கான எண்​ணிக்​கையை குறைப்​பது, தகு​தி​யான இளைஞர்​களின் வாய்ப்பை பறிக்​கும் செய​லாகும். இந்த நடை​முறை​யால் பதவி உயர்வு அடுக்​கு​முறை​யில் பாதிப்பு ஏற்​படும். தற்​காலிக பணி​யில் உள்​ளவர்​களை பணி நிரந்​தரம் செய்​யும் நோக்​கத்​தில் விதி​களில் திருத்​தம் செய்​யப்​பட்​டுள்​ளது.

எனவே, மாவட்ட நூலக அலு​வலர் பணி நியமன திருத்​தம் தொடர்​பான அரசாணையை ரத்து செய்து உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது. மனுவை நீதிப​தி​கள் ஜி.ஜெயச்​சந்​திரன், கே.கே.​ராம கிருஷ்ணன் அமர்வு விசா​ரித்​தது. அரசு வழக்​கறிஞர் வாதிடு​கை​யில், 38 மாவட்ட நூலக அலு​வலர் பணி​யிடங்​களில் 32 பணி​யிடங்​கள் காலி​யாக உள்​ளன.

இந்த காலி​யிடங்​களை தகு​தி​யான நபர்​களை கொண்டு நிரப்​பும் வகை​யில் விதி​களில் திருத்​தம் செய்​யப்​பட்​டுள்​ளது. நேரடி நியமனம் தொடர்​பாக விரை​வில் அறி​விப்பு வெளி​யிடப்​படும் என்​றார்.

பின்​னர் நீதிப​தி​கள், ஒரு பணி​யிடத்​துக்​கான தகு​தி​கள் மற்​றும் நியமன முறை​களை முடிவு செய்​வது அரசின் கொள்கை முடிவு சார்ந்​தது. அதில் நீதி​மன்​றம் தலை​யிட முடி​யாது.

அண்ணா நூற்​றாண்டு நூல​கம் போன்ற நவீன நூல​கங்​களில் அனுபவம் பெற்​றவர்​களை மாவட்ட நூலக அலு​வலர்​களாக நியமிப்​பது நிர்​வாக ரீதி​யாகச் சிறப்​பானது​தான். இது தொடர்​பான அரசாணை அரசி​யலமைப்​புக்கு எதி​ரானது என்​றோ, தன்​னிச்​சை​யாக எடுக்​கப்​பட்ட முடிவு என்றோ கருத முடி​யாது. மனு தள்​ளு​படி செய்​யப்​படு​கிறது என உத்​தர​விட்​டனர்.

SCROLL FOR NEXT