தமிழகம்

தமிழகத்தில் பெண்கள் நலனுக்காக ஐ.நா. அமைப்புடன் அரசு ஒப்பந்தம்

செய்திப்பிரிவு

சென்னை: ​மாநிலத்​தில் பெண்​களின் நலன், பாலின சமத்​து​வம் மற்​றும் அனை​வரை​யும் உள்​ளடக்​கிய வளர்ச்​சியை வலுப்​படுத்​தும் வகை​யில் ஐக்​கிய நாடு​கள் பெண்கள் அமைப்​பு, தமிழக அரசு இடை​யில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் முன்​னிலை​யில் ஒப்​பந்​தம் மேற்​கொள்​ளப்​பட்​டது.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: திட்​டம் மற்​றும் வளர்ச்​சித் துறை சார்​பில் மாநிலத்​தில் பெண்​களின் நலன், பாலின சமத்​து​வம் மற்​றும் அனை​வரை​யும் உள்​ளடக்​கிய வளர்ச்​சியை நோக்​கிய முயற்​சிகளை மேலும் வலுப்​படுத்​தும் வகை​யில், ஐக்​கிய நாடு​கள் பெண்கள் அமைப்பு மற்​றும் தமிழக அரசு இடை​யில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் முன்​னிலை​யில் புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் மேற்​கொள்​ளப்​பட்​டது.

மேலும், பொருளா​தார ஒத்​துழைப்பு மற்​றும் மேம்​பாட்​டுக்​கான அமைப்​பு, பொதுத்​துறை கண்​டு​பிடிப்​பு​களின் கண்​காணிப்​பகம், ஐக்​கிய நாடு​கள் சிறு​வர் நிதி​யம் ஆகிய அமைப்​பு​களு​டன் தமிழ்​நாடு அரசின் மாநில திட்ட குழு​வுக்​கும் இடையே​யான முத்​தரப்பு ஒத்​துழைப்பு மேற்​கொள்​ளப்​பட்​டது. அத்​துடன் தமிழ்​நாடு மாநிலக் குறிக்​காட்டி வரையறை 2.0-வை முதல்​வர் ஸ்டா​லின் வெளி​யிட்​டார்.

மேலும் மாநில திட்​டக்​குழு​வால் தயாரிக்​கப்​பட்ட, சுற்​றுச்​சூழல் அமைப்​புச் சேவை​களின் பொருளா​தார மதிப்​பீடு- தமிழகத்​தின் முன்​னுரிமை அளிக்​கப்​பட்ட 61 ஈரநிலங்​கள்/ நீர்​நிலைகள் பற்​றிய ஆய்​வு, தமிழக புறநகர் பகு​தி​களின் அமைப்பு மற்​றும் நிலை​யான புறநகர் மேலாண்மை கட்​டமைப்பை மேம்​படுத்​துதல், முதல்​வரின் மண்​ணு​யிர் காத்து மன்​னு​யிர் காப்​போம் திட்​டத்​தின்​கீழ் பசுந்​தாள் உரமிடு​தல் மீதான மதிப்​பீட்​டாய்​வு, தமிழகத்​தின் வளர் இளம் பெண்​களிடையே நீடிக்​கும் ரத்த சோகை: செயல்​பாட்டு இடைவெளி​களும் பாதிப்​பு​களும் ஆகிய 4 அறிக்​கைகளை மாநில திட்​டக் குழு​வின் செயல் துணைத் தலை​வர் ஜெ.ஜெயரஞ்​சன் முதல்​வர் ஸ்டா​லினிடம் வழங்​கி​னார்.

இந்​நிகழ்​வில், துணை முதல்​வர் உதயநி​தி, தலை​மைச்​செயலர் நா.​முரு​கானந்​தம், திட்​டம் மற்​றும் வளர்ச்​சித் துறை செய​லா​ளர் சஜ்ஜன்​சிங் ரா.ச​வான், பொருளியல் மற்​றும் புள்​ளி​யியல் ஆணை​யர் ஆர்​.ஜெ​யா, சமூக நலத்​துறை செயலர் ஜெய முரளிதரன்​ உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

SCROLL FOR NEXT