கோவையில் நேற்று நடந்த இந்திய தொழில் கூட்டமைப்பின் தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் பேசிய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா உள்ளிட்டோர்.

 
தமிழகம்

அதிக சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே அரசின் நோக்கம்: அமைச்சர் கீர்த்தனா தகவல்

செய்திப்பிரிவு

கோவை: தமிழகத்​தில் அதிக சம்​பளத்​துடன் கூடிய வேலை​வாய்ப்​பு​களை உரு​வாக்​கு​வதே அரசின் நோக்​கம் என தொழில்​துறை அமைச்​சர் கீர்த்​தனா கோவை​யில் தெரி​வித்​தார்.

இந்​திய தொழில் கூட்​டமைப்​பின் (சிஐஐ) தென் மண்டல கவுன்​சில் கூட்​டம் கோவை​யில் நேற்று நடை​பெற்​றது. தமிழகத்​தின் பல்​வேறு பகு​தி​களைச் சேர்ந்த தொழில்​துறை​யினர் பங்​கேற்​றனர். தமிழக தொழில் துறை அமைச்​சர் கீர்த்​தனா பங்​கேற்​று, சிஐஐ தென் மண்டல தலை​வர் ரவிச்​சந்​திரன் மற்​றும் தொழில்​துறை​யினருடன் கலந்​துரை​யாடி​னார். தொடர்ந்​து, தொழில் ​துறை​யினரின் கேள்வி​களுக்கு பதிலளித்​தார்.

பின்​னர் அமைச்​சர் செய்​தி​யாளர்​களிடம் தெரி​வித்​த​தாவது: தொழில்​ துறை​யினரின் முக்​கிய கோரிக்​கை​யான அடிப்​படைஉள்​கட்​டமைப்பு வசதி​களை மேம்​படுத்​து​வ​தில் அரசு உறு​தி​யாக உள்​ளது. ஒரு சிப்​காட் அமைத்​தால், அதற்​குத் தேவை​யான உள்​கட்​டமைப்​பு​களை உரு​வாக்​கு​வது அவசி​ய​மாகும். தமிழக அரசு ஒரு நேர்​மை​யான, வெளிப்​படை​யான அரசாகச் செயல்​படும்.

கோவை விமான நிலைய விரி​வாக்​கப் பணி முழு வீச்​சில் நடந்து வரு​கிறது. தமிழகத்​தில் தற்​போது சாதாரண வேலை​வாய்ப்​பு​களே அதி​க​மாக உள்ள நிலை​யில், இனிவரும் காலங்​களில் உயர்தர மற்​றும் அதிக சம்​பளத்​துட​னான வேலை​வாய்ப்​பு​களை கொண்டு வரு​வதே அரசின் முக்​கிய நோக்​கம்.

இதற்​காக முதலீட்​டாளர்​கள் தமிழகத்​துக்கு வரு​வதற்கு 6 மாதங்​களுக்கு முன்​பாகவே, உள்​ளூர் கல்​லூரி​களு​டன் இணைந்து நமது இளைஞர்​களுக்​குத் தேவை​யான திறன் மேம்​பாட்​டுப் பயிற்​சிகளை வழங்​கி, அவர்​களை தயார்​படுத்​தும் திட்​டம் செயல்​படுத்​தப்​படும். எம்​எஸ்​எம்இ துறை​யை மேம்​படுத்​த புதிய திட்​டம் தொடங்​கப்​பட்​டுள்​ளது.

தொழில்​துறை​யினரின் மின் கட்டண உயர்வு பிரச்​சினைக்கு மாற்​றாக, சோலார் உள்​ளிட்ட பசுமை ஆற்​றல் முறையை கொண்டு வர முயற்சி செய்து வரு​கிறோம். கடந்த காலங்​களில் போடப்​பட்ட புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​களில் சுமார் 25 சதவீத ஒப்​பந்​தங்​கள் கள அளவில் செயல்​படுத்​தப்​ப​டா​மல், வெறும் காகித அளவிலேயே உள்​ளன.

தமிழ்​நாட்டு இளைஞர்​கள் வேலைக்​காக வெளி மாநிலங்​களுக்​குச் செல்​லாமல் சென்​னை, கோவை, மதுரை போன்ற சொந்த ஊர்​களி​லேயே வேலை​வாய்ப்​புப் பெற நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வரு​கிறது. செமிகன்​டக்​டர் ஆலை குஜ​ராத்​துக்கு சென்​றிருக்​கும் நிலை​யில், மத்​திய அரசுடன் இணக்​க​மான முறை​யில்,முழு ஒத்​துழைப்​போடு செயல்​பட்டு தமிழ்​நாட்​டுக்​கான திட்​டங்​களைத் தொடர்ந்து பெற்​றுத்​ தரு​வோம்​. இவ்​வாறு அமைச்சர் தெரிவித்​தார்​.

SCROLL FOR NEXT