தமிழகம்

மூடப்படும் மதுக்கடை பார்களின் குத்தகை பணத்தை திருப்பித் தர அரசு பரிசீலிக்க உத்தரவு

செய்திப்பிரிவு

மதுரை: தமிழகத்​தில் மூடப்​படும் டாஸ்​மாக் கடைகளின் பார்களை குத்​தகை எடுத்​தவர்​களுக்கு பணத்தை திருப்பி அளிப்​பது தொடர்​பாக முடிவு எடுக்​கு​மாறு அரசுக்கு உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

தூத்​துக்​குடியைச் சேர்ந்த ராஜேஷ், கண்​ணன் உள்​ளிட்ட பலர், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில், மூடப்படும் டாஸ்மாக் கடைகளில் குத்தகை பணம் செலுத்தி பார்களை நடத்தி வருகிறோம். இதனை மூடு​வ​தால் எங்​களின் வாழ்​வா​தா​ரம் பாதிக்​கப்​படும். எனவே, குத்​தகை காலம் முடி​யும் வரை டாஸ்​மாக் கடைகளை மூடக்​கூ​டாது அல்​லது மூடப்​பட்ட நாட்​களுக்​கான தொகையை திருப்பித்தர உத்​தர​விட வேண்டும் எனக் கூறி​யிருந்​தனர்.

இந்த மனுவை விசா​ரித்த நீதிபதி பரத சக்​கர​வர்த்​தி, மதுக்​கடைகளை மூடும் தமிழக அரசின் உத்​தரவு வரவேற்​கத்​தக்​கது.கடை மூடப்​படும் நாட்​களுக்​கான குத்​தகை தொகையை திரும்ப அளிப்​பது தொடர்​பாக அரசு பரிசீலித்து 2 வாரங்​களில் முடி​வெடுக்க வேண்​டும் என உத்​தர​விட்டு வழக்கை முடித்து வைத்​தா​ர்.

SCROLL FOR NEXT