பாமக தலைவர் அன்புமணி

 
தமிழகம்

ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து: அன்புமணி வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: பாமக தலை​வர் அன்​புமணி நேற்று அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: நெல்லை மனோன்​மணீ​யம் சுந்​தர​னார் பல்​கலைக்​கழகத்​தில் 28-ம் தேதி நடை​பெறவுள்ள பட்​டமளிப்பு விழா​வில் முதலில் வந்தே மாதர​மும், அடுத்து தேசிய கீத​மும் பாடப்​பட்ட பிறகு மூன்​றாவ​தாகத்​தான் தமிழ்த்​தாய் வாழ்த்து பாடப்​படும் என்று அப்​பல்​கலைக்​கழகத்​தின் துணைவேந்​தர் சந்​திரசேகர் தெரி​வித்​துள்​ளார்.

தமிழ்த்​தாய் வாழ்த்தை எழு​தி​ய​வர் மனோன்​மணீ​யம் சுந்​தரம் பிள்​ளை. அவரது பெயர்​தான் நெல்லை பல்​கலைக்​கழகத்​துக்கு சூட்​டப்​பட்​டுள்​ளது. அங்​கு கூட, வந்தே மாதரம் பாடலை முதலில் பாட வேண்​டும் என்று ஆளுநர் மாளிகை கட்​டாயப்​படுத்​து​வதும், அதை துணைவேந்​தர் ஏற்றுக் கொள்​வதும் சரியல்ல.

தமிழகத்​தில் நடை​பெறும் ஆளுநர் பங்​கேற்​கும் நிகழ்ச்​சிகளில் தமிழ்த்​தாய் வாழ்த்​து​தான் முதலில் பாடப்பட வேண்​டும். நெல்லை மனோன்​மணீ​யம் சுந்​தர​னார் பல்​கலைக்​கழக பட்​டமளிப்பு விழா​விலும் தமிழ்த்​தாய் வாழ்த்து முதலில் பாடப்​படு​வதை தமிழக அரசும், பல்​கலைக்கழக நிர்​வாக​மும் உறு​தி​செய்ய வேண்​டும். இவ்​வாறு அன்புமணி தெரி​வித்​துள்​ளார்.

SCROLL FOR NEXT