சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
சட்ட மசோதாக்கள் விவகாரம் மற்றும் நிகழ்வுகளில் ஆளுநர் வெளியிடும் கருத்துகள் அடிப்படையில், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையில் பனிப்போர் நிலவி வருகிறது.
இந்த வகையில் சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவை ஆளுநர் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு தற்போது அனுப்பியுள்ளார். இந்தச் சூழலில் ஆளுநர் நேற்று திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
இன்று பிற்பகல் வரை அங்கு இருப்பார் என்றும், அதன்பின் சென்னை திரும்புவார் என ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.