விடுதலைப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு தினத்தையொட்டி சென்னை லோக்பவனில் உள்ள அவரது படத்துக்கு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

 
தமிழகம்

227-வது நினைவு தினத்தை முன்னிட்டு வீரபாண்டிய கட்டபொம்மன் படத்துக்கு ஆளுநர் மரியாதை

முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் புகழாரம்

செய்திப்பிரிவு

சென்னை: விடு​தலைப் போராட்ட வீரர் வீர​பாண்​டிய கட்​ட பொம்​மனின் 227-வது நினைவு நாள் நேற்று அனுசரிக்​கப்​பட்​டது. இதையொட்​டி, கிண்டி ஆளுநர் மாளி​கை​யில் வைக்​கப்​பட்​டிருந்த அவரது படத்​துக்கு ஆளுநர் ராஜேந்​திர விஸ்​வ​நாத் அர்​லேகர் மலர் தூவி மரி​யாதை செலுத்​தி​னார்.

முதல்​வர் மற்​றும் பல்​வேறு அரசி​யல்கட்​சித் தலை​வர்​கள் வீர​பாண்​டிய கட்​டபொம்​மனை நினை​வு​கூர்ந்து புகழாரம் சூட்​டினர்.

முதல்​வர் விஜய்: ஆங்​கிலேய ஆட்​சி​யின் அடக்​கு​முறைக்கு அடிபணி​யாமல் உரிமைக்​காக​வும், சுயமரி​யாதைக்​காக​வும் இறு​திவரை போராடிய​வர் வீர​பாண்​டிய கட்​டபொம்​மன்.

அநீ​திக்கு எதி​ராகக் குரல் கொடுக்​கும் துணி​வும், உரிமை​களைக் காக்​கும் உறு​தி​யும், தாய்​மண்ணை போற்​றும் உணர்​வும் ஒவ்​வொரு​வரிட​மும் வளர வேண்​டும் என்​ப​தற்கு அவரது வாழ்க்​கை, ஒரு வரலாற்று பாட​மாகும்.

திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின்: தூக்கு மேடைக்கு நடந்து செல்​லும்​போதும் துணிச்​சலோடும், கர்​வத்​தோடும் சென்ற விடு​தலை போராளி வீர​பாண்​டிய கட்​டபொம்​மன்.

மானம்​தான் பெரிதென வாழ்ந்​து, அந்​நியர் ஆட்​சிக்கு எதி​ரான கனலை மக்​கள் மனதில் விதைத்த அவரது வீரத்​துக்கு தலை​வணங்​கு​கிறேன். தமிழ்​நிலத்​தின் தன்​மானம் காத்த தியாகி வீர​பாண்​டிய கட்​டபொம்​மன் வாழ்க.

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி: ஆங்​கிலேய ஏகா​திபத்​தி​யத்​துக்கு அடிபணிய மறுத்​து, தாய்​நாட்​டின் சுதந்​திரத்​துக்​காக தன் உயிரையே தியாகம் செய்த பாஞ்​சாலங்​குறிச்​சி​யின் மாவீரர் வீர​பாண்​டிய கட்​டபொம்​மனின் நினைவு நாளில், தாய்​நாடு காக்க மரண கயிற்​றையே அரவணைத்துக் கொண்ட அவர்​தம் தீரத்​தை​யும், தியாகத்​தை​யும் போற்றி வணங்​கு​கிறேன்.

தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: ஆங்​கிலேயர்​களின் அடக்​கு​முறைக்​கும், அந்​நிய ஆட்​சிக்​கும் அடிபணிய மறுத்​து, தாய்​நாட்​டின் சுதந்​திரத்​துக்​காக துணிச்​சலுடன் போராடிய வீர​பாண்​டிய கட்​டபொம்​மனின் வீர​மும், தியாக​மும் இந்​திய வரலாற்​றில் என்​றும் அழி​யாது இடம்​பெறும்.

அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன்: ஆங்​கிலேயர்​களின் ஆதிக்​கத்​துக்கு அஞ்​சாமலும், அடக்​கு​முறைக்கு அடிபணி​யாமலும், மண்​ணின் உரிமைக்​காக​வும் மக்​களின் விடு​தலைக்​காக​வும் துணிந்து நின்ற மாவீரர் வீர​பாண்​டிய கட்​டபொம்​மன். அவரது வீரத்​தை​யும் தியாகத்​தை​யும் எந்​நாளும் நினை​வில் வைத்து வணங்​கிடு​வோம்.

வீ த லீடர்ஸ் தலை​வர் அண்​ணா​மலை: ஆங்​கிலேய ஏகா​திபத்​தி​யத்​துக்கு எதி​ராக அஞ்​சாமல் நின்​று, தாய்​நாட்​டின் சுதந்​திரத்​துக்​காக இறு​திவரை போராடி, தன்​னு​யிரை தியாகம் செய்த வீர​பாண்​டிய கட்​டபொம்​மனின், துணிச்​சலும், தியாக​மும் வரலாற்​றில் என்​றும் நிலைத்​திருக்​கும்.

இதே​போல் எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி, தி​முக துணைப் பொதுச்​செய​லா​ளர் கனி​மொழி எம்​.பி. உள்​ளிட்​டோரும்​ வீர​பாண்​டிய கட்​டபொம்​மனை நினைவுகூர்​ந்​தனர்​.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT