செந்தில் பாலாஜி

 
தமிழகம்

செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி: இறுதிக் கட்டத்தை நெருங்குகிறது விசாரணை

செய்திப்பிரிவு

சென்னை: பண மோசடி வழக்​கில் முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி மீது அமலாக்​கத் துறை வழக்கு தொடர ஆளுநர் அனு​மதி அளித்​துள்​ளார்.

திமுக எம்​எல்​ஏ​வும், முன்​னாள் அமைச்​சரு​மான செந்​தில் பாலாஜி, அதி​முக ஆட்​சி​யில் போக்​கு​வரத்து துறை அமைச்​ச​ராக இருந்​த​போது, வேலை வாங்​கித் தரு​வ​தாக கூறி பணம் பெற்று மோசடி​யில் ஈடு​பட்​ட​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது. இந்த விவ​காரம் தொடர்​பாக சென்னை மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​தனர்.

இந்த விவ​காரத்​தில் சட்ட விரோத பணப் பரி​மாற்ற தடுப்​புச் சட்​டத்​தின்​கீழ் அமலாக்​கத் துறை​யும் தனி​யாக வழக்கு பதிவு செய்து விசா​ரித்​தது. செந்​தில் பாலாஜி கைது செய்​யப்​பட்டு சிறை​யில் அடைக்​கப்​பட்​டார். ஓராண்​டுக்​கும் மேலாக சிறை​யில் இருந்த அவர், பின்​னர் நிபந்​தனை ஜாமீனில் விடுவிக்​கப்​பட்​டார். இந்த வழக்​கில் சென்னை சிறப்பு நீதி​மன்​றத்​தில் அமலாக்​கத் துறை குற்​றப்​பத்​திரி​கை​யும் தாக்​கல் செய்​தது.

முன்​னாள் அமைச்​சர் என்​ப​தால் செந்​தில் பாலாஜி மீது விசா​ரணை நடத்த மாநில அரசின் அனு​மதி அவசி​யம். அந்த வகை​யில், செந்​தில் பாலாஜி மீது மேல் நடவடிக்கை மற்​றும் விசா​ரணைக்கு அனு​மதி கோரி தலை​மைச் செயலருக்கு அமலாக்​கத் துறை கடந்த மே 15-ம் தேதி கடிதம் எழு​தி​யது. அதன்​பேரில், ஆளுநருக்கு தமிழக அரசு கடிதம் அனுப்​பியதை அடுத்​து, ஆளுநரும் அனு​மதி அளித்​துள்​ளார்.

இதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறியுள்ளதாவது: ஆளுநர் அனு​மதி அளித்​துள்​ள​தால், இந்த கோப்பு உடனடி​யாக தலை​மைச் செயல​கத்​துக்கு செல்​லும். அதன்​பிறகு, செந்​தில் பாலாஜி மீது வழக்கு தொடர அனு​மதி அளித்து தமிழக அரசு அதி​காரப்​பூர்​வ​மாக அரசாணை வெளி​யிடும். தற்​போது எம்​.பி., எம்​எல்​ஏக்​களுக்​கான சென்னை சிறப்பு நீதி​மன்​றத்​தில் இந்த வழக்கு நிலு​வை​யில் உள்​ளது. அரசாணை வெளி​யான பிறகு, நீதி​மன்​றத்​தில் அந்த அனு​மதி கடிதத்தை அமலாக்​கத் துறை தாக்​கல் செய்​யும். அதன் பின்​னர், நீதி​மன்​றம் செந்​தில் பாலாஜி மீதான குற்​றச்​சாட்​டு​களை பதிவு செய்​து, வழக்​கின் முறை​யான விசா​ரணை​யைத் தொடங்​கும். அமலாக்​கத் துறை தனது தரப்பு சாட்​சிகள் மற்​றும் ஆதா​ரங்​களை நீதி​மன்​றத்​தில் முன்​னிறுத்தி விசா​ரணையை அடுத்த கட்​டத்​துக்கு நகர்த்​தும்.

தற்​போது ஆளுநரின் அனு​மதி கிடைத்​துள்​ள​தால் இந்த வழக்​கின் முட்​டுக்​கட்டை நீங்​கி, சிறப்பு நீதி​மன்​றத்​தில் செந்​தில் பாலாஜிக்கு எதி​ரான விசா​ரணை வேகமெடுத்​து, இறு​திக் கட்​டத்தை நோக்கி நகரத் தொடங்​கும். அதே​நேரம், அரசு அனு​மதி அளித்​ததை எதிர்த்​தோ, தன் மீதான வழக்கை ரத்து செய்​யக் கோரியோ உயர் நீதி​மன்​றம் அல்​லது உச்ச நீதி​மன்​றத்​தில் செந்​தில் பாலாஜி மேல்​முறை​யீடு செய்ய சட்​டப்​பூர்​வ வாய்ப்​பு​களும்​ உள்​ளன. இவ்​வாறு அவர்​கள்​ தெரிவித்​தனர்​.

SCROLL FOR NEXT