தமிழகம்

மகாவீர் ஜெயந்தி: ஆளுநர், அரசியல் தலைவர்கள் வாழ்த்து

செய்திப்பிரிவு

சென்னை: மகாவீர் ஜெயந்தி இன்று கொண்​டாடப்​படு​கிறது. இதை யொட்டி ஆளுநர் மற்​றும் பல்​வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் தங்​களது வாழ்த்​துகளை பகிர்ந்து கொண்​டனர்.

இது தொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்ட வாழ்த்​துச் செய்​தி​களில் கூறி​யிருப்​ப​தாவது:

ஆளுநர் ராஜேந்​திர விஸ்​வ​நாத் அர்​லேகர்: “நான் உனக்கு பல விஷ​யங்​களை போதித்​திருக்​கலாம். அது சரியா தவறா என்று பகுத்​தாய்ந்து அதை நீ ஏற்​கலாம்; இல்லை நிராகரிக்​கலாம். அதற்கு உனக்கு முழு உரிமை உண்​டு” என்று பகுத்​தறிவைப் போதித்​தவர் மகாவீரர்.

          

அகிம்​சை, உண்​மையை கடைபிடிக்​கும் கோட்​பாடு, பற்​றின்மை என்ற முப்​பெரும் பாதை​யில் செல்​வோர் இப்​பிற​விப் பிணி​யான பிறப்பு இறப்​பிலிருந்து விடு​பட்டு தெய்​வ​மாக முடி​யும் என்று வாழ்ந்து காட்​டிய​வர். அவரது வழி​யில் சமண தர்​மத்தை பின்​பற்​றும், உலகெங்​கிலும் வாழும் சகோதர சகோ​தரி​களுக்கு மகாவீர் ஜெயந்தி வாழ்த்​துகள்.

தமிழக காங்​கிரஸ் தலை​வர் கு.செல்​வப்​பெருந்​தகை: கடந்த 10 ஆண்​டு​களுக்​கும் மேலாக நாட்​டில் வளர்க்​கப்​பட்ட வெறுப்​பு, கசப்பு உணர்​வு​களை வீழ்த்​து​வதற்கு நம்​மிடையே இருக்​கிற மிகச் சிறந்த சித்​தாந்​தங்​களில் ஒன்று மகாவீரர் வழங்​கிய போதனை​கள்.

அந்த போதனை​கள்​தான் இன்​றைக்கு இந்​தி​யா​வில் அமை​தி​யை​யும், நல்​லிணக்​கத்​தை​யும் வளர்க்​கப் பெரிதும் உதவும். அவரது பிறந்​த​நாளைக் கொண்​டாடும் இந்​நாளில், தமிழகத்​தில் அவரது போதனை​களைப் பின்​பற்றி வாழும் சமண சமு​தாய மக்​கள் அனை​வருக்​கும் மகாவீர் ஜெயந்தி நல்​வாழ்த்​துகள்.

பாமக தலை​வர் அன்​புமணி: துறவறத்​தின் அடை​யாள​மாகத் திகழ்ந்த மகாவீரரின் பிறந்​த​நாளை கொண்​டாடும் சமண மக்​கள் அனை​வருக்​கும் மகாவீர் ஜெயந்தி வாழ்த்​துகளைத் தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

மகாவீரரின் வாழ்க்கை வரலாறு மட்​டுமல்ல; மனிதர்​கள் பின்​பற்ற வேண்​டிய பாடம். எறும்​புக்​குக் கூட தீங்கு விளைவிக்​காமல் வாழ்ந்து காட்​டிய மகாவீரரின் வாழ்க்​கையை மனிதகுலம் முழு​மை​யும் கடைபிடித்​தால் உலகம் அமை​தி​யும், வளமும், மகிழ்ச்​சி​யும் நிறைந்​த​தாக மாறும். மகாவீரர் பிறந்​த​நாளில், அவர் விரும்​பிய மது இல்​லாத உலகம், அன்பு நிறைந்த மக்​களை உரு​வாக்க அனை​வரும் உறு​தி​யேற்​போம்.

தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன்: மகாவீர் ஜெயந்தி தினத்​தில் மகாவீரின் போதனை​களை நினை​வு​கூர்ந்​து, அவரது போதனை​களான அகிம்​சை, சத்​தி​யம், இரக்​கம் மற்​றும் நேர்மை ஆகிய​வற்​றைப் பின்​பற்றி வாழ்​வோம்.

வன்​முறையற்ற வாழ்க்கை முறையை ஊக்​கு​விப்​போம். தீவினையைத் தவிர்க்​க​வும், தர்​மம் வாழ​வும், நல்​லெண்​ணம் ஓங்​க​வும், நல்​லவை பேசி மகாவீரரின் புகழை பாடுவோம். இவ்வாறு வாழ்த்து தெரி வித்துள்ளனர்.

SCROLL FOR NEXT