ஊட்டி லாரன்ஸ் பள்ளி நிறுவனர் நாள் விழாவில் பங்கேற்ற தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

 
தமிழகம்

கல்வியுடன் இணைந்து மனிதாபிமானத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்: மாணவர்களுக்கு ஆளுநர் அறிவுரை

ஆர்.டி.சிவசங்கர்

ஊட்டி: ​மாணவர்​கள் கல்​வி​யுடன் இணைத்து மனி​தாபி​மானத்​தை​யும் வளர்த்​துக்​கொள்ள வேண்​டும் என ஆளுநர் ராஜேந்​திர விஸ்​வ​நாத் அர்​லேகர் கூறினார்.

நீல​கிரி மாவட்​டம் ஊட்டி லவ்​டேல் லாரன்ஸ் பள்​ளி​யின் 168-வது நிறு​வனர் நாள் விழா​வில் சிறப்பு விருந்​தின​ராக பங்கேற்ற தமிழக ஆளுநர் ராஜேந்​திர விஸ்​வ​நாத் அர்​லேகர், மாணவர்​களுக்கு பரிசுகளை வழங்கி பேசி​ய​தாவது: தேசிய கல்விக் கொள்​கை​யின் இலக்​கு​களை அடைய, லாரன்ஸ் பள்ளி போன்ற கல்வி நிறு​வனங்​கள் பெரும் பங்​களிப்பை வழங்​கு​கின்​றன.

கல்வி முறை​யில் சிறந்து விளங்​குபவர்​கள் கொண்​டாடப்பட வேண்​டும். அவர்​களின் வெற்றி என்​பது அந்த ஒட்​டுமொத்த கல்வி முறை​யின் வெற்​றி​யாகும்.

மாணவர்​கள் அதிக மதிப்​பெண் எடுக்க வேண்​டும் என்ற எதிர்​பார்ப்பு இன்று உள்​ளது. இளம் தலை​முறை​யினர் கல்​வி​யுடன் இணைத்து மனி​தாபி​

மானத்​தை​யும் வளர்த்​துக்​கொள்ள வேண்​டும். கல்வி முடிந்த பின் சமூகத்​துக்​கும் தேசத்​துக்​கும் சேவை செய்​யும் மனப்​பான்மை அவசி​யம்.

ஐஐடி, ஐஐஎம் உள்​ளிட்ட உயர்​கல்வி வாய்ப்​பு​களை பயன்​படுத்​தி, வேலை தேடு​பவர்​களாக அல்​லாமல் வேலை அளிப்​பவர்​களாக உரு​வாக வேண்​டும்.

பள்​ளி​களி​லும் கல்​லூரி​களி​லும் தொழில்​முனை​வோர் மேம்​பாட்​டுப் பிரிவு​கள் அமைக்க வேண்​டியது அவசி​யம். புத்​தாக்க சிந்​தனை​களை மாணவர்​கள் இளமை​யிலேயே வளர்த்​துக் கொள்ள வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

விழா​வில், பள்ளி தலை​மை​யாசிரியர் டி.​வி.எஸ்​.​ராவ் வரவேற்​றார். இப்​பள்​ளி​யில் படித்த முன்​னாள் மாணவர்​கள், பெற்​றோர் உள்​ளிட்​டோர் விழா​வில் பங்​கேற்​றனர்.

SCROLL FOR NEXT