பி.டி.அரசகுமார்

 
தமிழகம்

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி: பி.டி.அரசகுமார் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

செய்திப்பிரிவு

சென்னை: தனி​யார் பள்​ளி​களுக்கு அங்​கீ​காரம் பெற்​றுத் தரு​வ​தாகக் கூறி ரூ.100 கோடிக்கு மேல் மோசடி செய்த புகாரில் கைது செய்​யப்​பட்ட பி.டி.அரசகு​மார், குண்​டர் தடுப்​புச் சட்​டத்​தின் கீழ் கைது செய்​யப்​பட்​டுள்​ளார்.

புதுக்​கோட்​டையைச் சேர்ந்த பி.டி.அரசகு​மார், சென்னை சாலிகி​ராமத்​தைத் தலை​மை​யிட​மாகக் கொண்​டு, ‘தமிழ்​நாடு தனி​யார் பள்​ளி​கள் சங்​கம்’ என்ற பதிவு செய்​யப்​ப​டாத அமைப்பை நடத்தி வந்​தார். திமுக​வின் செய்​தித் தொடர்பு குழுத் துணைத் தலை​வ​ராக இருந்த அரசகு​மார், தனது அரசி​யல் செல்​வாக்​கைப் பயன்​படுத்தி தமிழகம் முழு​வதும் உள்ள தனி​யார் பள்​ளி​களை அணுகி​யுள்​ளார்.

பள்​ளி​களுக்​கான அங்​கீ​காரம், தரம் உயர்த்​துதல் மற்​றும் சென்னை பெருநகர வளர்ச்​சிக் குழு​மத்​தின் சட்​டப்​பூர்வ அனு​ம​தி​களைப் பெற்​றுத் தரு​வ​தாகக் கூறி, பல பள்ளி நிர்வாகி​களிடம் பெரு​மளவு பணம் வசூலித்​துள்​ளார். அந்த வகை​யில், ரூ.100 கோடிக்​கும் மேல் மோசடி செய்​த​தாகப் பாதிக்​கப்​பட்ட பள்ளி நிர்​வாகி​கள் புகார் அளித்​துள்​ளனர். அதன் அடிப்​படை​யில், சென்னை மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார், பி.டி.அரசகு​மாரைக் கைது செய்து சிறை​யில் அடைத்​தனர்.

அதைத் தொடர்ந்து அவரைப் போலீஸ் காவலில் எடுத்து விசா​ரணை நடத்தி ஆதா​ரங்​களை​யும் திரட்​டினர். இந்த மோசடி தொடர்​பாகத் தமிழகத்​தின் பல்​வேறு பகு​தி​களில் இருந்து இது​வரை 59 தனி​யார் பள்​ளி​கள் மத்​திய குற்​றப்​பிரி​வில் புகார் அளித்​துள்​ளன. பி.டி.அரசகு​மாரின் தொடர் மோசடி நடவடிக்​கைகளைக் கட்​டுப்​படுத்​தும் நோக்​கில், சென்னை காவல் ஆணை​யர் அவரை குண்​டர் தடுப்​புச் சட்​டத்​தின் கீழ் சிறை​யில் அடைக்க உத்​தரவு பிறப்​பித்​துள்​ளார். இதற்​கான நகல் சிறை​யில் உள்ள பி.டி.அரசகு​மாரிடம்​ வழங்​கப்​பட்​டது.

SCROLL FOR NEXT