தமிழகம்

ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளி: ‘கோல்ட் ஹார்ட் பவுண்டேஷன்’ சார்பில் கொண்டாட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: சமூக நல அமைப்பான கோல்ட் ஹார்ட் பவுண்டேஷன் சார்பில் சென்னையில் ஆதரவற்ற, பழங்குடியின மற்றும் சமூகத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் வாழும் சுமார் 2,300-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான ‘தித்திக்கும் தீபாவளி’ கொண்டாட்ட நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

17-வது ஆண்டாக குழந்தைகளுக்கான இந்த தீபாவளி கொண்டாட்ட நிகழ்வை கோல்ட் ஹார்ட் பவுண்டேஷன் ஏற்பாடு செய்தது. இதில் பல்வேறு காப்பகங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் பழங்குடியின கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகள் பங்கேற்றனர்.

சென்னை - மேற்கு தாம்பரத்தில் உள்ள ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற இந்த ஒருநாள் நிகழ்வில் குழந்தைகள் உற்சாகமாக பங்கேற்றனர்.

ஆதரவற்ற குழந்தைகளின் மகிழ்ச்சியை நோக்கமாக கொண்டு இந்த ‘தித்திக்கும் தீபாவளி’ கொண்டாட்டம் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்திலும் குழந்தைகளின் நலன் முதன்மையாக கொண்டு மிக துல்லியமாக ஏற்பாட்டாளர்கள் செய்தனர்.

இதில் கலந்து கொண்ட ஒவ்வொரு குழந்தைக்கும் புதிய ஆடைகள், இனிப்புகள், உணவு விருந்து மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் தன்னார்வலர்கள், நன்கொடையாளர்கள், பெருநிறுவன ஆதரவாளர்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகள் எனப் பல தரப்பினரும் பங்கேற்று தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT