தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன்

 
தமிழகம்

தேர்தல் ஆணையத்தில் சீர்திருத்தம் அவசியம்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி: தேர்தல் ஆணையத்தில் அவசியமான சீர்திருத்தங்கள் தேவை என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்டம் போலுப்பள்ளியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மீதான வாக்காளர்கள் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஜனநாயக முறைப்படி தேர்தல்கள் நேர்மையாகவும், நம்பகத்தன்மையுடனும் நடைபெற வேண்டுமானால், தேர்தல் ஆணையத்தில் அவசியமான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் மின்வெட்டால் எந்தத் தரப்பினரும் பாதிக்கப்படக் கூடாது. தற்போதைய சூழலில் மின் தட்டுப்பாட்டைத் தவிர்க்கவும், மின்தேவையைச் சமாளிக்கவும் அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மின்துறை அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT