கிரிஷ் சோடங்​கர் |கோப்புப் படம்

 
தமிழகம்

“​காங்கிரஸுக்கு 25 தொகுதிகள் ஏற்புடையதல்ல” - கிரிஷ் சோடங்கர் கருத்து

செய்திப்பிரிவு

சென்னை: “தி​முக எங்​களுக்கு 25 தொகு​தி​களை ஒதுக்க முன்​வந்​துள்​ளது. ஆனால், அது எங்​களுக்கு ஏற்​புடைய​தாக இல்​லை. எங்​களது தேவையை அவர்​களிடம் தெளி​வாகத் தெரி​வித்​துள்​ளோம்” என்று தமிழக காங்​கிரஸ் மேலிட பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்​கர் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து டெல்​லி​யில் அவர் நிருபர்​களிடம் கூறிய​தாவது: தொகு​திப் பங்​கீடு தொடர்​பாக எங்​களது குழு​வினரும், திமுக குழு​வினரும் சுமார் ஒரு மணி நேரம் விரி​வாக ஆலோ​சனை​களை நடத்​தினோம். நாங்​கள் சமர்ப்​பித்த விருப்​பப் பட்​டியலை திமுக ஏற்​கும் என்று நம்​பு​கிறோம். அவர்​கள் எங்​களுக்கு 25 தொகு​தி​களை ஒதுக்க முன்​வந்​தார்​கள், ஆனால் அது எங்​களுக்கு ஏற்​புடைய​தாக இல்​லை. எங்​களது தேவையை அவர்​களிடம் தெளி​வாகத் தெரி​வித்​துள்​ளோம்.

          

தவெக ஒரு புதிய கட்​சி. அவர்​களை நாம் குறைத்து மதிப்​பிடமுடி​யாது. இளைஞர்​களிடையே அவர்​களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரு​கிறது. அதே​போல தமிழகத்​தில் காங்​கிரஸின் வலிமை​யை​யும், எங்​கள் தலை​வர் ராகுல் காந்​தி​யின் செல்​வாக்​கை​யும் அவர்​களும் அங்​கீகரித்து வரு​கிறார்​கள்.

தற்​போதைய நிலை​யில் திமுக-வுடன் பேச்​சு​வார்த்தை நடை​பெற்று வரு​கிறது. இந்​தத்தேர்​தலில் எங்​களுக்கு என்னவேண்​டும் என்​பது குறித்த விருப்​பப் பட்​டியலை ஏற்​கெனவே அவர்​களிடம் சமர்ப்​பித்​து​விட்​டோம். இவ்​வாறு அவர் கூறி​னார்​.

SCROLL FOR NEXT