தமிழகம்

திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கின் அவமதிப்பு மனுக்களை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரிக்க தடை

கி.மகாராஜன்

மதுரை: ​திருப்​பரங்​குன்​றம் தீபத்தூண் வழக்​கின் அவம​திப்பு மனுக்​களை தனி நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன் விசா​ரிக்க இடைக்​கால தடை விதித்து உயர் நீதி​மன்ற அமர்வு உத்​தர​விட்​டது.

திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் உள்ள தீபத்​தூணில் தீபம் ஏற்ற வேண்​டும் என தனி நீதிபதி ஜிஆர்.சுவாமி நாதன் பிறப்​பித்த உத்​தரவு நிறைவேற்​றப்​ப​டாத நிலையில், மதுரை மாவட்டஆட்சி​யர், மாநகர காவல் ஆணை​யர், துணை ஆணை​யர், திருப்​பரங்​குன்​றம் கோயில் செயல் அலு​வலர் ஆகியோ​ருக்கு எதி​ராக நீதி​மன்ற அவம​திப்பு மனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டன.

          

இந்த மனுக்களை விசா​ரித்த தனி நீதிப​தி, பல்​வேறு உத்​தர​வு​களைப் பிறப்​பித்​தார். இதற்கு எதிராக அரசுத் தரப்​பிலும், சம்​பந்​தப்​பட்ட அதி​காரி​கள் தரப்​பிலும் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டது.

இந்த மனுக்​கள் அனைத்​தும் நீதிப​தி​கள் சதீஷ்கு​மார், ஜோதி​ராமன் அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தன. அப்​போது தர்கா தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர்​கள் மோகன், வாஞ்​சி​நாதன் ஆகியோர், தீப வழக்​கில் உத்​தரவு பிறப்​பித்த தனி நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், தனி​யார் நிகழ்ச்​சி​யில் பங்​கேற்று மாதிரி தீபத்​தூணில் தீபம் ஏற்​றி​யுள்​ளார். இந்த வழக்கு தொடர்​பான பொருளு​டன் தனி நீதிபதி இணைந்​து​ விட்​டார்.

எனவே, நீதி​மன்ற அவம​திப்பு வழக்​கு​களை நீதிபதி விசா​ரிக்​கக் கூடாது என்​றனர். பின்​னர் நீதிப​தி​கள், இந்த வழக்கு மிக​வும் முக்​கி​யத்​து​வம் வாய்ந்த வழக்​கு. இதில் அவசரம் காட்ட முடி​யாது. இந்த விவ​காரத்​தில் நீதி​மன்​றத்தை அரசி​யல் மேடை​யாக மாற்ற வேண்​டாம். இது சிறிய பிரச்​சினை, ஊதிப் பெரிய பிரச்​சினை​யாக மாற்​றப்​பட்​டுள்​ளது.

மேல்​முறை​யீடு மனு மீது இரு நீதிப​தி​கள் ஏற்​கெனவே இறுதி உத்​தரவு பிறப்​பித்​துள்​ளனர். அதன் பிறகும் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமி​நாதனின் உத்​தரவை மிகைப்​படுத்து​வது ஏன், இந்த வழக்​கில் யாரும் குரலை உயர்த்தி நீதி​மன்​றத்தை மிரட்​டும் நோக்​கத்​தில் பேசக் கூடாது என்​றனர்.

அப்​போது கூடு​தல் அரசு வழக்​கறிஞர்​கள் வீராக​திர​வன், ரவீந்​திரன் ஆகியோர் நீதி​மன்ற அவம​திப்பு வழக்கை விசா​ரிக்க இரு நீதிப​தி​கள் அமர்வு தடை விதித்த பிறகும் தனி நீதிபதி தொடர்ந்து விசாரிக்கிறார்.

டிச.4 உத்​தர​வுக்​குத்​தான் தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது. முழு அவம​திப்பு நடவடிக்​கைக்​கும் தடை விதிக்​க​வில்லை என்று கூறி தனி நீதிபதி விசா​ரணையை ஏப்​.9-க்கு தள்​ளி​வைத்​துள்​ளார் என்​றனர்.

பின்​னர் நீதிப​தி​கள், தனி நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதனின் உத்​தர​வுக்கு இரு நீதிப​தி​கள் அமர்வு தடை விதித்த பிறகு அவர் விசா​ரிக்க முடி​யாது. அந்த வழக்கு தானாக இரு நீதிப​தி​கள் அமர்​வுக்கு வந்​து​விடும்.

நீதி​மன்ற அவம​திப்பு வழக்​கு​களை தனி நீதிபதி விசா​ரிக்க வேண்​டுமா அல்​லது இரு நீதிப​தி​கள் அமர்வு விசா​ரிக்க வேண்​டுமா என்​பதை விசா​ரித்து உரிய முடி​வெடுப்போம். அது​வரை அவம​திப்பு மனுக்​கள் மீது தனி நீதிபதி பிறப்​பித்த அனைத்து உத்​தர​வு​களுக்​கும் இடைக்​காலத் தடை விதிக்​கப்​படு​கிறது. விசா​ரணை ஜூன் 4-க்கு தள்​ளிவைக்​கப்​படு​கிறது என உத்​தர​விட்​டனர்.

SCROLL FOR NEXT