சென்னை: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: தவெக கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், தற்போது தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி இருப்பது மகிழ்ச்சிக்குரியது.
இத்திட்டம் சமுதாயத்தில் ஒரு தாய்மாமனின் உணர்வுபூர்வமான அன்பையும், ஆதரவையும், நம்பிக்கையையும் பெண்களுக்கு அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
மகளிருக்கு ஒவ்வொரு குடும்பத்தோடும் ஏற்பட இருக்கின்ற பாசம், பந்தம், நம்பிக்கை அதன் அடிப்படையில் ஏற்படும் நல்லுறவு வலுப்படும்.
அதோடு குழந்தை பிறந்த நாள் அன்றே அவர்களுடைய எதிர்காலம் வசந்த காலமாக மாறுவதற்கு அடையாளமாக இத்திட்டம் திகழும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.