ஏஐ படம்

 
தமிழகம்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் திட்டம்: ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனத்துக்கு டெண்டர்

கடந்த ஆட்சியைவிட குறைந்த விலைக்கு கொள்முதல் என விளக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்​களுக்கு இல​வச மிதிவண்டி விநியோகம் செய்​வதற்​கான டெண்​டர் பிரபல ஹீரோ சைக்​கிள்ஸ் நிறு​வனத்​துக்கு வழங்​கப்​பட்​டுள்​ளது. திமுக ஆட்​சி​யைவிட குறைந்த விலைக்கு கொள்​முதல் செய்​யவுள்​ள​தாக தகவல் வெளியாகி உள்​ளது.

தமிழகத்​தில் அரசு, அரசு உதவி பெறும் பள்​ளி​களில் பிளஸ் 1 படிக்​கும் மாணவர்​களுக்கு ஆண்​டுதோறும் இல​வச சைக்​கிள் வழங்​கப்​பட்டு வரு​கிறது. இந்​நிலை​யில் தவெக ஆட்​சிக்கு வந்​த​பின் மாணவர்​களுக்கு விநியோகிக்​கப்​படும் மிதிவண்​டிகளின் தரத்தை மேம்​படுத்த முடிவு செய்​தது.

அதன்​படி நடப்பு கல்​வியாண்​டில் (2026-27) மாணவர்​களுக்கு வழங்​கு​வதற்​காக ரூ.277 கோடி​யில் 5.32 லட்​சம் நவீன மிதிவண்​டிகள், ஹெல்​மெட் மற்​றும் தண்​ணீர் பாட்​டில்​களு​டன் கொள்​முதல் செய்​யப்​பட உள்​ளன. இதற்​கான டெண்​டர் பிற்​படுத்​தப்​பட்​டோர் நலத்​துறை சார்​பில் கடந்த ஆக.28-ம் தேதி வெளி​யிடப்​பட்​டது.

இந்த டெண்​டரில் ஹீரோ சைக்​கிள்ஸ் லிமிடெட் நிறு​வனம் குறைந்த விலை​யைக் குறிப்​பிட்டு முதலிடம் பிடித்​தது. அதில் ஒரு மாணவருக்கு வரி​கள் உள்பட ரூ.7,235 மதிப்​பிலும், ஒரு மாணவிக்கு வரி​கள் உள்​பட ரூ.7,476 மதிப்​பிலும் சைக்​கிள் வழங்​கு​வ​தாக விலை நிர்​ணயம் செய்​திருந்​தது. இந்த விலைகளின்​படி கொள்​முதல் செய்​தால், அரசுக்கு ஒட்​டுமொத்​த​மாக சுமார் ரூ.392 கோடி செல​வாகும்.

இது ஏற்​கெனவே ஒதுக்​கப்​பட்ட நிதி​யைவிட கூடுதலாக சுமார் ரூ.115 கோடிசெல​வாகும் நிலை இருந்​தது. இதன்​காரண​மாக விலையை குறைப்​ப​தற்​காக ஹீரோ நிறு​வனத்​துடன் தமிழக அரசு தரப்​பில் பல்​வேறுகட்ட பேச்சு​வார்த்​தைகள் நடத்​தப்​பட்​டன.

அதன்​பலனாக மாணவருக்கு ரூ.5,260-க்​கும், மாணவிக்கு ரூ.5,130-க்​கும் விலையை குறைக்க ஹீரோ நிறு​வனம் ஒப்​புக்​கொண்​டது. அதாவது, சைக்​கி​ளின் அடிப்​படை விலை மாணவருக்கு ரூ.4,369, ஜிஎஸ்டி ரூ.218 மற்​றும் மாணவி சைக்​கிள் ரூ.4,245, ஜிஎஸ்டி ரூ.212 என்​றவாறு விலை நிர்​ணயிக்​கப்​பட்​டது.

இது​த​விர ஹெல்​மெட் ரூ.560, தண்​ணீர் பாட்​டில் ரூ.112 ஆகிய​வற்​றின் விலை​யும் ஜிஎஸ்டி வரி​களு​டன் இறுதி செய்​யப்​பட்​டுள்​ளது. இதையடுத்து இல​வச சைக்​கிள்​களை தயாரித்து விநியோகம் செய்​வதற்​கான டெண்​டர் ஹீரோ நிறு​வனத்​துக்கு வழங்​கப்​பட்​டுள்​ளது. 5 மாதங்​களில் சைக்​கிள்​களை தயாரித்து வழங்​கப்படும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

விலை உயர்வா? - இதற்​கிடையே முந்​தைய திமுக ஆட்​சி​யைவிட சற்று குறைந்த விலைக்கே சைக்​கிள் கொள்​முதல் செய்​யப்​பட்​டுள்ள​தாக தமிழக அரசு விளக்​கம் அளித்​துள்ளது. 202526-ம் ஆண்​டில் ஒரு சைக்கிள் மாணவருக்கு ரூ.4,375-க்​கும், மாணவிக்கு ரூ.4,250-க்​கும் வாங்​கப்​பட்​டன.

தற்போது அதைவிட குறைவாக மாணவருக்கு ரூ.4,369-க்​கும், மாணவிக்கு ரூ.4,245-க்​கும் சைக்கிள்கள் கொள்​முதல் செய்​யப்​பட​வுள்​ளன. மேலும், அப்​போது சாதா​ரண சைக்கிள்கள் மட்​டுமே வாங்​கப்​பட்​டன. தற்​போது ஹெல்​மெட், தண்​ணீர் பாட்​டிலுடன் கூடிய நவீன சைக்கிள்கள் வாங்​கப்​பட உள்​ள​தாக தமிழக அரசு தகவல் தெரி​வித்​துள்​ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT