அக்பர் அலி, சிக்கந்தர் பீவி, செய்யது அலி பாத்திமா

 
தமிழகம்

சிவகாசியில் மனைவி, குழந்தைக்கு தீவைத்த தொழிலாளி உட்பட 4 பேர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

சிவகாசி: விருதுநகர் மாவட்​டம் சிவகாசி முஸ்​லிம் ஓடை தெரு​வைச் சேர்ந்​தவர் முபாரக் அலி. இவரது மனைவி செய்​யது அலி பாத்​தி​மா(35). இவருக்கு பர்​வீன்​(18) என்ற மகளும், பாரூக்​(13) என்ற மகனும் உள்​ளனர்.

சாலை விபத்​தில் கணவர் உயி​ரிழந்த நிலை​யில் செய்​யது அலி பாத்​தி​மா, மனை​வியைப் பிரிந்து வாழ்ந்த அக்​பர் அலி (55) என்​பவரை 2-வது திரு​மணம் செய்​தார்.

இதற்​கிடையே இறந்த முபாரக் அலி​யின் காப்​பீட்டு பணத்​தைக் கேட்டு தகராறில் ஈடு​பட்​டு, செய்​யது அலி பாத்​தி​மாவை தாக்​கிய வழக்​கில் கைதான அக்​பர் அலி, கடந்த 2 நாட்​களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்​தார்.

பின்​னர் அவர் நேற்று முன்​தினம் அதி​காலை வீட்​டில் தூங்​கிக் கொண்​டிருந்த செய்​யது அலி பாத்​தி​மா, பாரூக், பர்​வீன், அவரது தாய் சிக்​கந்​தர் பீவி ஆகியோர் மீது பெட்​ரோல் ஊற்றி தீ வைத்​தார். அப்​போது அக்​பர் அலி மீதும் தீப்​பற்​றியது.

இதில் பலத்த காயமடைந்த 5 பேரை​யும் போலீ​ஸார் மீட்​டு, சிவகாசி அரசு மருத்​து​வ​மனை​யில் சேர்த்​தனர். அங்கு மூதாட்டி சிக்​கந்​தர் பீவி, செய்​யது அலி பாத்​திமா, அக்​பர் அலி​ மற்றும் சிறுவன் பாரூக் ஆகியோர் உயி​ரிழந்​தனர். சிறுமி பர்​வீனுக்கு தீவிர சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது.அக்பர் அலி, சிக்கந்தர் பீவி, செய்யது அலி பாத்திமா

SCROLL FOR NEXT