தமிழகம்

பொள்ளாச்சி அருகே கார் மீது லாரி மோதி தம்பதி உள்பட 4 பேர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

பொள்ளாச்சி: பொள்​ளாச்​சியை அடுத்த நெகமம் அருகே கார் மீது லாரி மோ​தி​ய​தில் கணவன், மனைவி உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.

சேலம் மாவட்​டம், காடை​யம்​பட்​டியைச் சேர்ந்​தவர் தனபால் (37). இவரும், மனைவி மேனகா (35), மகள் கனிஷ்கா (17), மகன் சுர்​ஜித் (12) மற்​றும் மேன​கா​வின் சகோ​தரரின் மகள் சினேகா (23) ஆகியோ​ரும் வால்​பாறைக்கு சுற்​றுலா வந்​து​விட்டு நேற்று மதி​யம் சொந்த ஊர் புறப்​பட்​டனர். பொள்​ளாச்சி​யில் இருந்து பல்​லடம் நோக்கி நேற்று மதி​யம் காரில் சென்று கொண்​டிருந்​தனர்.

நெகமம் அருகே வந்​த​போது, எதிரே வந்த லாரி கட்​டுப்​பாட்டை இழந்து கார் மீது மோ​தி​யது. இதில் தனபால், மேன​கா, சினேகா ஆகியோர் படு​காயமடைந்து சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தனர். காயத்​துடன் உயிருக்கு போ​ராடிக் கொண்​டிருந்த கனிஷ்கா மற்​றும் சுர்​ஜித் ஆகியோரை அரு​கில் இருந்​தவர்​கள் மீட்டு, பொள்​ளாச்சி அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பினர். ஆனால் வழி​யிலேயே கனிஷ்கா உயி​ரிழந்​தார். காயமடைந்த சுர்​ஜித் கோவை அரசு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளார்.

தகவலறிந்து பொள்​ளாச்சி துணை காவல் கண்​காணிப்​பாளர் நவீன்​கு​மார் சம்பவ இடத்​தில் விசா​ரணை நடத்​தி​னார். உயி​ரிழந்​தவர்​களின் உடல்​கள் உடற்கூ​ராய்​வுக்​காக மருத்​துவ​மனைக்கு கொண்டு செல்​லப்பட்​டன. நெகமம் போலீ​ஸார் வழக்கு பதிந்து லாரி ஓட்​டுநர் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சரவணனை கைது செய்​தனர்.

SCROLL FOR NEXT