தமிழகம்

மதுராந்தகம் இடைத்தேர்தல் ஜனநாயக படுகொலை: முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

மது​ராந்​தகம்: ரெட்​டைமலை சீனி​வாசன் நினைவு நாளை​யொட்டி அவரது சிலைக்கு மாலை அணி​வித்து மரி​யாதை செலுத்​திய முன்​னாள் அமைச்​சர் எ.வ.வேலு, மது​ராந்​தகம் தொகு​தி​யின் இடைத்​தேர்​தல் ஜனநாயகப் படு​கொலை என்று கூறி​னார்.

ரெட்​டைமலை சீனி​வாசன் நினைவு நாளை ஒட்​டி, செங்​கல்​பட்டு மாவட்​டம், அச்​சிறுப்​பாக்​கம் பகு​தி​யில் உள்ள அவரது நினைவு மண்​டபத்​தில் சிலைக்கு மாலை அணி​வித்து மரி​யாதை செலுத்​தும் நிகழ்ச்சி நேற்று நடை​பெற்​றது.

இதில் முன்​னாள் அமைச்​சர் எ.வ.வேலு தலை​மை​யில், திமுக மாவட்​டச் செய​லா​ளர்​கள் தா.மோ.அன்​பரசன், க.சுந்​தர் ஆகியோர் முன்​னிலை​யில், மது​ராந்​தகம் திமுக வேட்​பாளர் பரந்​தாமன் ரெட்​டைமலை சீனி​வாசன் சிலைக்கு மாலை அணி​வித்து மரி​யாதை செலுத்​தினர்.

பின்​னர் முன்​னாள் அமைச்​சர் எ.வ.வேலு செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: கடந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் மரகதம் குமர​வேலுக்கு எதி​ராக வாக்​களித்த கட்​சி​யில் சேர்ந்​து, வாக்​களித்த மக்​களுக்கு எதி​ராகவே தற்​போது தேர்​தலில் போட்​டி​யிடு​கிறார்.

மது​ராந்​தகம் இடைத்​தேர்​தல் என்​பது ஜனநாயகப் படு​கொலை. திமுக வேட்​பாள​ருக்கு கிராமங்​கள்​தோறும் படித்த இளைஞர்​கள் ஆதர​வாக இருப்​பதை நாம் பார்க்​கிறோம்.

தவெக வேட்​பாளர் செல்​லும் இடமெல்​லாம் மக்​கள் விரட்டி அடிப்​ப​தை​யும் பார்த்து வரு​கிறோம். இதனால் தவெக வேட்​பாளர் போலீஸ் பாது​காப்​போடு பிரச்​சா​ரத்​துக்கு செல்​லும் நிலைமை ஏற்​பட்​டுள்​ளது என்​று அவர்​ தெரி​வித்​தார்​.

SCROLL FOR NEXT