தமிழகம்

பாலியல் வழக்கில் முன்னாள் டிஜிபியின் தண்டனை நிறுத்திவைப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி / சென்னை: பெண் எஸ்​.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்​கில் முன்​னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு விதிக்​கப்​ பட்ட தண்​டனையை உச்ச நீதி​மன்​றம் நிறுத்தி வைத்தது.

இந்த வழக்​கில், ராஜேஷ் தாஸுக்கு விழுப்​புரம் குற்​றவியல் நடு​வர் நீதி​மன்​றம் 3 ஆண்​டு தண்டனை விதித்தது. இதனை விழுப்புரம் முதன்மை அமர்வு நீதி​மன்​றம் கடந்த பிப்.12-ம் தேதி உறுதி செய்​தது.

          

இந்​நிலை​யில், “இத்​தண்​டனையை நிறுத்தி வைக்கவும் சரணடைவ​தில் விலக்கு அளிக்கக் கோரியும் ராஜேஷ் தாஸ் தரப்​பில் உச்ச நீதி​மன்​றத்தில் மனுத் தாக்கல் செய்​யப்பட்​டது.

இதனை விசாரித்த தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் தலை​மையி​லான அமர்வு, கீழ் நீதி​மன்​றம் விதித்த தண்​டனையை நிறுத்தி வைத்​தது. மேலும் தண்​டனைக்கு எதி​ராக சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்த மேல்​முறை​யீட்டு மனுவை விரைந்து விசா​ரிக்க முறை​யிட தமிழக அரசுக்கு நீதிப​தி​கள் அனு​மதி அளித்​தனர்​.

SCROLL FOR NEXT