எஸ்.வளர்மதி
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இவர் நாளை தவெகவில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் நாளை தவெகவில் இணைய உள்ளனர். இந்தச் சூழலில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதியும் நாளை தவெகவில் இணையவுள்ளதாக தகவல் பரவின. இதனை இன்று சி.விஜயபாஸ்கரும் உறுதி செய்தார்.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதியை அதிமுகவில் இருந்து நீக்கி அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் 2015 இடைத்தேர்தல் மற்றும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் இவர் வெற்றி பெற்றார். 2016 முதல் 21 வரை அதிமுக அரசில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.