தமிழகம்

யானைகள் புத்துணர்வு முகாமை மீண்டும் தொடங்காதது ஏன்? - அறிக்கை அளிக்க வனத்துறைக்கு உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: கரோனா கால​கட்​டத்​தில் நிறுத்​தப்​பட்ட யானைகள் புத்​துணர்வு முகாமை மீண்​டும் தொடங்​காதது குறித்து அறிக்கை தாக்​கல் செய்ய வனத்​துறைக்கு உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

வனவிலங்​கு​கள் மற்​றும் வனப்​பாது​காப்பு தொடர்​பான வழக்​கு​கள் மீதான விசா​ரணை நீதிப​தி​கள் என்​.சதீஷ்கு​மார், டி.பரதசக்​ர​வர்த்தி ஆகியோர் அமர்​வில் நடந்து வரு​கிறது.

இந்த வழக்கு விசா​ரணை​யின்​போது வனவிலங்​கு​கள் ஆர்​வல​ரான முரளிதரன், “கோ​யில் யானை​களை ஆண்​டு​தோறும் புத்துணர்வு முகா​ம் அழைத்து செல்​லப்​பட்​டு, மற்ற யானை​களு​டன் பழக​வைத்​து, அந்த யானை​களுக்கு தேவை​யான மருத்​துவ சிகிச்​சைகள், சிறப்​பான உணவு வகைகள் வழங்​கப்​பட்டு புத்​துணர்வு அளிக்​கப்​பட்​டது.

இந்த நடை​முறை கரோனா கால கட்​டத்​தில் நிறுத்​தப்​பட்​டது. அதன்​பின் யானை​களுக்​கான புத்​துணர்வு முகாம் நடத்​தப்​பட​வில்லை என குற்​றம்சாட்​டினார்.

அதையடுத்து நீதிப​தி​கள், புத்​துணர்வு முகாமை மீண்​டும் தொடங்​காதது ஏன் என கேள்வி எழுப்​பி, அதுதொடர்​பாக விரிவான அறிக்கை அளிக்க வனத்துறைக்கு உத்​தர​விட்டனர்.

மேலும் வனப்​பகு​தி​களில் தாயைப் பிரி​யும் குட்டி யானை​களை வனப்​பகு​தி​யில் விடும்​போது அவற்றை வனத்துறை கண்​காணிப்​பது இல்​லை. எனவே தாயைப் பிரி​யும் குட்டி யானை​களை மீட்​டு, முகாமில் பராமரித்து அவற்றை ஒன்​றாக சேர்த்து வனப்​பகு​தி​களில் விட வேண்​டும் என்ற மனு​தா​ரரின் ஆலோ​சனை குறித்​தும் அறிக்கை தாக்​கல் செய்ய வனத்துறைக்கு உத்​தர​விட்டு விசா​ரணையை வரும் பிப்​.6-க்கு தள்ளிவைத்​துள்​ளனர்.

SCROLL FOR NEXT