தமிழகம்

கலப்படங்களை தடுக்கும் வகையில் ஐஸ்கிரீம் தயாரிப்பை கண்காணிக்க உணவு பாதுகாப்புத் துறை உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: ஐஸ்​கிரீமில் சுவையூட்​டிகள் போன்ற கலப்​படங்​களைத் தடுக்​கும் வகை​யில், ஐஸ்கிரீம் தயாரிப்பை கண்​காணிக்க அதி​காரி​களுக்கு உணவு பாது​காப்​புத் துறை உத்​தர​விட்​டுள்​ளது.

தமிழகத்​தில் கோடை வெயில் சுட்​டெரிக்​கத் தொடங்​கி​யுள்ள நிலை​யில், குளிர்​பானங்​கள் மற்​றும் ஐஸ்கிரீம்​களின் விற்​பனை அதி​கரித்​துள்​ளது. இந்​நிலை​யில் உரிய உரிமம் இன்றி ஐஸ்​கிரீம் தயாரிப்​பது, லாப நோக்​கில் கலப்​படங்​களைச் செய்​வது போன்ற முறை​கேடு​கள் அதி​கரிக்க வாய்ப்​புள்​ளது.

இதனால் குழந்​தைகள் முதல் பெரியோர் வரை அனை​வரது உடல்​நல​மும் பாதிக்​கும் அபாயம் இருக்​கிறது. இதை கருத்​தில்​கொண்​டு, மாநிலம் முழு​வதும் உணவுப் பாது​காப்​புத் துறை அதி​காரி​கள் தீவிர சோதனை​யில் ஈடுபட உத்​தர​விடப்​பட்​டுள்​ளது.

அதன்​படி இயற்கை சர்க்​கரைக்கு மாறாக தரம் குறைந்த சுவையூட்​டிகள், செயற்கை நிறமிகள் மற்​றும் ஆபத்​தான வேதிப்​பொருட்​களை கலப்​பது, குளிர்​பானங்​களில் பாஸ்​போரிக் அமிலம் மற்​றும் சலவைத்​தூள் கூட்​டுப் பொருட்​களைச் சேர்ப்​பது, தயாரிப்​புக்கு சுகா​தா​ரமற்ற நீரைப் பயன்​படுத்​து​வது போன்​றவற்​றைத் தடுக்​கும் பொருட்​டு, மாவட்ட உணவு பாது​காப்​புத் துறை அதி​காரி​களுக்கு ஐஸ்​கிரீம், குளிர்​பான உற்​பத்தி நிறு​வனங்​களில் தொடர் சோதனை​களை மேற்​கொள்​ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆய்​வின்​போது, தயாரிப்பு நிறு​வனங்​கள் முறை​யாக உரிமம் பெற்​றுள்​ளன​வா, தயாரிப்பு மற்​றும் காலா​வதி தேதி உறை​களில் அச்​சிடப்​பட்​டுள்​ள​தா, மூலப்​பொருட்​களின் தரம் ஆகிய​வற்றை அதி​காரி​கள் ஆய்வு செய்​யு​மாறு உத்​தரவு வழங்​கப்​பட்​டுள்​ளது.

மேலும் பொது​மக்​கள் தரப்​பிலிருந்து வரும் புகார்​களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்​க​வும், உணவுப் பாது​காப்​புத் துறை​யின் வழி​காட்​டு​தல்​களை மீறி செயல்​படும் நிறு​வனங்​களின் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்​க​வும் அதி​காரி​களுக்​குத் துறை ரீ​தி​யான வழி​காட்டு நெறி​முறை​கள் வழங்​கப்​பட்டுள்​ளன. கோடைக்​காலம் முழு​வதும் இந்த கண்​காணிப்​புப் பணி தொடரும்​ எனத்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT