தமிழகம்

அமைச்சர் அன்பில் மகேஸ் வேண்டுகோளை ஏற்று இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நிறுத்தம்

செய்திப்பிரிவு

சென்னை: சம வேலைக்கு சம ஊதி​யம் கோரி தமிழகம் முழு​வதும் கடந்த 37 நாட்​களாக நடை​பெற்​று​வந்த இடைநிலை ஆசிரியர் போராட்​டம் தள்ளிவைக்​கப்​பட்​டுள்​ளது.

தமிழகத்​தில் அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு உள்ள ஊதிய முரண்​பாட்டை களைந்து சம வேலைக்கு சம ஊதி​யம் வழங்​கக் கோரி இடைநிலை ஆசிரியர்​கள் நீண்​ட​ கால​மாக வலி​யுறுத்தி வரு​கின்​றனர். இதரற்காக பல்வேறுகட்ட போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

          

இந்​நிலை​யில் இக்​கோரிக்​கையை முன்​வைத்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்​கம் (எஸ்​எஸ்​டிஏ) சார்​பில் கடந்த டிச.26-ம் தேதி முதல் தமிழகம் முழு​வதும் தொடர் போராட்​டங்​கள் நடத்​தப்​பட்​டன.

இதுதொடர்​பாக பள்​ளிக்​கல்​வித் துறை அதி​காரி​கள், அமைச்சர் ஆகியோ​ருடன் 2 முறை நடத்​திய பேச்​சு​வார்த்​தை​யில் முடிவு எட்​டப்​பட​வில்​லை. அதே​போல், போராட்​டத்​தில் பங்​கேற்ற ஆசிரியர்​களுக்கு ஊதி​யம் பிடித்​தம் செய்​யப்​படும் என்று தொடக்​கக் கல்​வித் துறை எச்​சரிக்கை விடுத்தது. எனினும், ஆசிரியர்​களின் போராட்​டம் தொடர்ந்​தது.

இதற்​கிடையே போராட்​டத்​தில் ஈடு​பட்ட பெரும்​பாலான இடைநிலை ஆசிரியர்​களுக்கு ஜனவரி மாதத்​துக்​கான ஊதி​யத்தை தமிழக அரசு நிறுத்​திவைத்​தது. அதே​நேரம் தொடர்ந்து 37-வது நாளாக சென்னை டிபிஐ வளாகம் முன் நேற்​றும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்​டம் நடத்​தினர்.

இந்​நிலை​யில் பள்​ளிக்​கல்​வித் துறை அமைச்​சர் அன்​பில் மகேஸ் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறியிருப்பதாவது: விரை​வில் மூவர் குழு அறிக்கை வெளி​யிடப்பட உள்​ளது. அதன் அடிப்படை​யில் இடைநிலை ஆசிரியர்கள் ஊதி​யப் பிரச்​சினை குறித்து முடிவு எடுக்​கப்​படும். போராட்டத்​தில் உள்ள ஆசிரியர்​கள் பள்​ளிக்​குத் திரும்பி கற்​பித்​தல் பணி​களில் ஈடுபட வேண்​டும். தமிழக அரசின் மீது நம்​பிக்கை வைத்து போராட்​டங்​களில் ஈடு​ப​டா​மல் மாணவர்​கள் நலன்​கருதி பள்​ளிக்கு தொடர்ந்து சென்று கற்​பித்​தல் பணி​களில் ஈடு​படும் ஆசிரியர்​களுக்கு நன்​றியைத் தெரிவிக்​கிறேன். மேலும், மொத்​த​முள்ள இடைநிலை ஆசிரியர்​களில் பணி​களுக்குச் செல்​லாமல் இருக்​கின்ற 5,781 ஆசிரியர்​களையும் கற்​பித்​தல் பணிக்குத் திரும்​பு​மாறு கேட்​டுக் கொள்​கிறேன்’’ என்று கூறப்​பட்​டிருந்​தது.

அதைத்​தொடர்ந்து எஸ்​எஸ்​டிஏ பொதுச்​செயலர் ஜெ.​ராபர்ட் வெளி​யிட்ட அறிக்​கை​யில், ‘‘அமைச்​சர் கோரிக்​கையை ஏற்​றும், தமிழக அரசு மற்​றும் முதல்​வர் மீது நம்​பிக்கை வைத்​தும், மாணவர்​கள் கல்வி நலன், நெடு​நாட்​களாகப் போராடிவரும் இடைநிலை ஆசிரியர்​கள் உடல்​நலன் ஆகிய​வற்​றைக் கருத்​தில் கொண்​டும் நல்​லெண்ண அடிப்​படை​யில் போராட்​டம் தற்​காலிக​மாக தள்ளிவைக்​கப்​படு​கிறது. கற்​றல் இடைவெளியை நீக்கி முன்​பை​விட கற்​பித்​தல் பணி​யில்வெகு சிறப்​பாக ஈடு​படு​வோம்​’’ என்​று தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT