அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியைச் சேர்ந்தவர் லட்சுமி அம்மாள் (75). நாட்டுப்புறப் பாடகி.
தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர். இவர் பருத்தி வீரன் படத்தில் பிரபலமான ‘ஊரோரம் புளியமரம்’ என்ற பாடலைப் பாடி உள்ளார். இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த லட்சுமி அம்மாள் நேற்று காலை காலமானார்.
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள நிதிஅமைச்சர் தங்கம் தென்னரசு, கிராமிய இசையில் லட்சுமி அம்மாள் குரல் தனித்துவமான அடையாளமாக இருந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.
போலி ஆவணங்கள் மூலம் சிங்கப்பூரை சேர்ந்த மூதாட்டியின் ரூ.800 கோடி சொத்துகள் மோசடி