தமிழகம்

60 பேருடன் துபாய்க்கு புறப்பட்ட விமானம்: மீண்டும் சென்னையில் தரையிறக்கம்

துபாயில் சிக்கி தவித்த 217 பேர் சென்னை வந்தனர்

செய்திப்பிரிவு

சென்னை: போர் ​காரண​மாக வான்​வழிப் பாதை மூடப்பட்ட​தால், சென்​னையி​லிருந்து 60 பேருடன் துபாய்க்கு புறப்​பட்ட விமானம் மீண்​டும் சென்னை வந்து தரை​யிறங்​கியது.

அமெரிக்​கா, இஸ்​ரேல் - ஈரான் இடையே ஏற்​பட்​டுள்ள போர் காரண​மாக, கடந்த 28-ம் தேதி முதல் ஐக்​கிய அரபு நாடுகள், வளை​குடா நாடு​கள், மத்திய கிழக்கு நாடு​கள் இடையே விமான சேவைகள் முழு​வது​மாக பாதிக்​கப்​பட்​டுள்​ளது.

          

சென்னை விமான நிலை​யத்​தி​லும் 3 நாட்​களாக விமான சேவை​கள் ரத்​தாகி​யுள்​ளன. இந்​நிலை​யில் துபா​யில் சிக்​கித் தவிக்​கும் பயணி​கள் வசதிக்​காக, நேற்று முன்​தினம் நள்​ளிர​விலிருந்து சில விமானங்​களை மட்​டும் இயக்க துபாய் அரசு அனு​மதித்தது.

இதையடுத்​து, நேற்று முன்​தினம் நள்​ளிரவு எமிரேட்ஸ் ஏர்​லைன்ஸ் விமானம் குழந்​தைகள், பெண்​கள் உட்பட 217 பயணி​களு​டன் துபாயி​லிருந்து புறப்​பட்டு சென்​னைக்கு நேற்று அதி​காலை 2.15 மணிக்கு வந்​தது.

இதனைத் தொடர்ந்​து, துபாய் செல்ல முடி​யாமல் கடந்த 3 நாட்​களுக்கு மேலாக சென்னை விமான நிலை​யத்​தில் தவித்​துக் கொண்​டிருந்​தவர்​களை துபாய் அழைத்​துச் செல்ல எமிரேட் ஏர்​லைன்ஸ் விமானம் தயா​ரானது. 36 இந்​திய பயணி​கள், 12 வெளி​நாட்​டுப் பயணி​கள், விமான ஊழியர்​கள் 12 பேர் என மொத்​தம் 60 பேருடன் விமானம் நேற்று அதி​காலை 3.53 மணிக்கு சென்​னையி​லிருந்து துபாய்க்கு புறப்​பட்​டது.

விமானம் மும்​பையை கடந்​து, அரபிக் கடல் பகு​தி​யில் சுமார் 38 ஆயிரம் அடி உயரத்​தில் பறந்து கொண்டு இருந்​த​போது, போர் சுழல் மீண்​டும் அதி​கரித்​த​தால், துபாய் வான்​வழி மூடப்​பட்​டுள்​ள​தாக விமானிக்கு அவசரத் தகவல் வந்​தது.

விமானி உடனடி​யாக சென்னை விமான நிலைய கட்​டுப்​பாட்டு அறையை தொடர்பு கொண்​டு, விமானத்தை மீண்​டும் சென்​னைக்கு திருப்​பிக் கொண்டு வந்து தரையை இறக்​கு​வதற்கு அனு​மதி கேட்​டார். அதற்கு கட்​டுப்​பாட்டு அறை அதி​காரி​கள் அனு​மதி கொடுத்​தனர்.

இதையடுத்து விமானம் திரும்பி வந்து சென்​னை​யில் நேற்று காலை 7.20 மணிக்கு தரை​யிறங்​கியது. விமானத்​தில் இருந்த பயணி​கள் அனை​வரும், விமானத்​திலிருந்து கீழே இறக்​கப்​பட்​டு, சென்​னை​யில் உள்ள ஓட்​டல்​களில் தங்க வைக்​கப்​பட்​டுள்​ளனர்.

துபா​யில் நிலைமை சீரடைந்​து, வான்​வழி பாதை மீண்​டும் திறக்​கப்​பட்ட பிறகு, இந்த விமானம் மீண்​டும் சென்​னையி​லிருந்து துபாய்க்கு புறப்​பட்​டுச் செல்​லும் என்று அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

31 விமானங்​கள் ரத்து போர் காரண​மாக நேற்று 4-வது நாளாக துபாய், அபு​தாபி, ஷார்​ஜா, குவைத், மஸ்​கட், தோஹா உள்​ளிட்ட பகு​தி​களுக்​குச் செல்ல வேண்​டிய 16 புறப்​பாடு விமானங்​கள், அங்​கிருந்து சென்​னைக்கு வரவேண்​டிய 15 வருகை விமானங்​கள் என மொத்​தம் 31 விமானங்​கள் ரத்து செய்​யப்​பட்​டன.

ரத்து செய்​யப்​படும் விமானங்​களின் எண்​ணிக்கை அதி​கரிக்க வாய்ப்​புள்​ள​தால், பயணி​கள் விமான நிறு​வனங்​களைத் தொடர்பு கொண்டு பயணத்தை திட்​ட​மிடு​மாறு சென்னை விமான நிலைய அதி​காரி​கள் அறி​வுறுத்​தி​யுள்​ளனர். முதல் நாளில் 28 வி​மானங்​கள், 2-வது நாளில் 33 வி​மானங்​கள்​, மூன்​றாவது நாளில்​ 36 வி​மானங்​கள்​ ரத்​து செய்​யப்​பட்​டது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT