தமிழகம்

சென்னையில் வசிப்பவர்கள் வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு செல்வதால் விமான டிக்கெட் கட்டணம் உயர்வு

செய்திப்பிரிவு

சென்னை: சென்​னை, புறநகரில் வசிப்​பவர்​கள் வாக்களிக்க சொந்த ஊர்​களுக்கு விமானங்​களில் செல்​வ​தால் விமான டிக்கெட் கட்​ட​ணம் உயர்ந்​துள்​ளன.

தமிழகத்​தில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் இன்று நடை​பெறுகிறது. 5.73 கோடி வாக்​காளர்​கள் வாக்​களிக்க உள்​ளனர். பல்​வேறு வேலைகளுக்​காக வெளி​நாடு​களுக்​குச் சென்​றவர்​கள் இந்​தத் தேர்​தலில் வாக்​களிப்​ப​தற்​காக விமானம் மூலம் சென்னை திரும்​பிக் கொண்​டிருக்​கின்​றனர்.

கார் பந்​த​யத்​துக்​காக பெல்​ஜி​யம் சென்​றிருந்த நடிகர் அஜித்​கு​மார் வாக்​களிப்​ப​தற்​காக நேற்று விமானம் மூலம் சென்னை திரும்​பி​னார்.

ரயில், பஸ் டிக்கெட்

அதே​நேரம், சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் வசிக்​கும் வெளியூர் மக்​கள், தேர்​தலில் வாக்​களிப்​ப​தற்​காக சொந்த ஊருக்கு ரயில், பேருந்​துகளில் செல்​கின்​றனர்.

டிக்​கெட் கிடைக்​காதவர்​கள் விமானம் மூலம் செல்​வ​தால், சென்னை விமான நிலை​யத்​தில் பயணி​களின் கூட்​டம் அதி​கரித்​துள்​ளது. இதனால் சென்​னையி​லிருந்து தூத்​துக்​குடி, மதுரை, திருச்​சி, கோவை, சேலம் செல்​லும் விமானங்​களில் டிக்​கெட் கட்​ட​ணம் பல மடங்கு உயர்ந்​துள்​ளது.

டிக்​கெட் கட்​ட​ணத்​தைப் பற்றி கவலைப்​ப​டா​மல், தேர்​தலில் வாக்​களித்து ஜனநாயக கடமை​யாற்ற வேண்​டும் என்ற ஒரே நோக்​கத்​தில் பயணி​கள் போட்டி போட்​டுக் கொண்டு முன்​ப​திவு செய்​து வரு​கின்​றனர்​.

SCROLL FOR NEXT