தமிழக அரசின் புதிய தலைமைச் செயலகம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மீனவ கிராம மக்கள் ஒன்று கூடி சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். | படம்: எல்.சீனிவாசன் |

 
தமிழகம்

புதிய தலைமைச் செயலகம் அமைக்க எதிர்ப்பு: பட்டினப்பாக்கத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

அரசாணையை ரத்து செய்து நிலத்தை வழங்க வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: பட்​டினப்​பாக்​கம் பகுதியில் புதிய தலை​மைச் செயல​கம் அமைப்​ப​தற்​கான அரசாணையை ரத்து செய்​யக் கோரி​யும், முள்​ளிக்​குப்​பம், முள்​ளி​மாநகர் பகுதி மீனவர்​களுக்கு சொந்​த​மான பூர்​வீக நிலத்தை பட்​டாவுடன் மீண்​டும் ஒப்​படைக்க கோரி​யும் முள்​ளிக்​குப்​பம் சீனி​வாசபுரம் மீனவர் பஞ்​சா​யத்து சபை மற்​றும் முள்​ளி​மாநகர் மீனவர் பஞ்​சா​யத்து சபை தலை​மை​யில் கண்டன ஆர்ப்​பாட்​டம், பட்​டினப்​பாக்​கத்​தில் நேற்று நடை​பெற்​றது.

எண்​ணூர் முதல் கோவளம் குப்​பம் வரை உள்ள பல்​வேறு மீனவ பஞ்​சா​யத்து சபைகள், மீனவர் அமைப்​பு​கள் என ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் பங்​கேற்​றனர்.

ஆர்ப்​பாட்​டம் தொடர்​பாக செய்​தி​யாளர்​களிடம் மயி​லாப்​பூர் பகுதி அனைத்து மீனவ கிராம சபை​யின் ஒருங்​கிணைப்​பாளர் பாரதி கூறிய​தாவது: பட்​டினப்​பாக்​கத்​தில் புதிய தலை​மைச் செயல​கம் அமைப்​ப​தற்​காக அரசாணை​யில் குறிப்​பிட்​டுள்ள சர்வே எண் 4592, 4593-களில் உள்ள 25 ஏக்​கர் காலி​யிட​மானது, முள்​ளிக்​குப்​பம் மற்​றும் முள்​ளி​மாநகர் மீனவமக்​களின் பூர்​வீக நில​மாகும்.

கடந்த 1957-ம் ஆண்டு மீனவர்​களுக்​காக போடப்​பட்ட அரசாணை மூலம் அப்​பகுதி பட்டா நிலங்​களை அரசு கையகப்​படுத்​தி, குடிசைப் பகுதி என அறி​வித்​தது. பின்​னர், அங்​கிருந்த மீனவர்​களுக்கு 875 சதுர அடி​யில் அனைத்து அடிப்​படை வசதி​களு​டன் கூடிய குடி​யிருப்​பு​கள் கட்​டித் தரப்​படும் என அரசு வாக்​குறுதி அளித்து அதற்​கான அரசாணை​யை​யும் வெளி​யிட்​டது.

ஆனால், அந்த வாக்​குறு​தியை மீறி 1+1 என்ற வீதத்​தில் அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​கள் மட்​டுமே கட்​டிக் கொடுக்​கப்​பட்​டன. அதை ஏற்க மறுத்த மீனவர்​களை அங்​கிருந்து அப்​புறப்​படுத்​தி, கடலுக்​கும் அடை​யாறு ஆறு கடலில் கலக்​கும் முகத்​து​வாரத்​துக்​கும் இடைப்​பட்ட புறம்​போக்கு நிலத்​தில் அரசு குடியேற்​றியது.

இதனால் சிறு மழை, வெள்​ளம் வந்​தா​லும் தாழ்​வான அப்​பகு​தி​யில் நீர் புகுந்து மீனவர்கள் கடுமை​யாகப் பாதிக்​கப்​படு​கின்​றனர்.

எனவே, எங்​கள் முன்​னோர்​கள் வாழ்ந்த (சர்வே எண் 4592, 4593) எங்​கள் சொந்த நிலத்​திலேயே எங்​களுக்கு மீண்​டும் குடி​யிருப்​பு​களை அமைத்​துத் தர வேண்​டும் என கடந்த 3 ஆண்​டு​களாக தொடர்ந்து போராடி வரு​கிறோம்.

ஆனால், புதிய தலை​மைச் செயல​கம் அமைக்​கப் போகிறோம் என்​று தமிழக அரசு கூறுகிறது. இந்த போராட்​டத்​தில் தமிழகம் முழு​வதும் உள்ள அனைத்து பகுதி மீனவர்​களை​யும் எங்​களால் ஒன்​றிணைக்க முடி​யும்.

மாநில அளவி​லான மீனவர் போராட்​ட​மாக இது மாறு​வதற்கு முன், புதிய தலை​மைச் செயல​கம் அமைக்​கும் அரசாணையை அரசு உடனடி​யாக ரத்து செய்ய வேண்​டும். அந்த இடத்தை பூர்​வீக​மாகக் கொண்ட மீனவர்​களுக்​கே வழங்​க வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ கூறினார்.

SCROLL FOR NEXT