நாகர்கோவில் பெண் யூடியூபர் வீட்டில் நகை திருடிய 4 பேர் கைது: 98 பவுன் நகைகள் மீட்பு

நகை கொள்ளையில் கைது செய்யப்பட்டவர்கள். (உள்படம்) யூடியூபர் மதுமிதா

நகை கொள்ளையில் கைது செய்யப்பட்டவர்கள். (உள்படம்) யூடியூபர் மதுமிதா

Updated on: 
1 min read

நாகர்கோவில்: ​நாகர்கோவில் அருகே பெண் யூடியூபர் வீட்டில் தங்கநகை திருடு போன சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 98 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.

நாகர்கோவில் அருகே தம்மத்து க்கோணம் விஜபி கார்டன் பகுதியில் வசித்து வருபவர் ஏலக்காய் வியாபாரி வினோத் குமார்(33). இவரது மனைவியும், பிரபல யூடியூபருமான மதுமிதா (28), சமீபத்தில் பணம் மற்றும் நகைகளைக் குவித்து வைத்தும், குழந்தைக்கு அவற்றை அபிஷேகம் செய்வது போலவும் வீடியோ எடுத்து, அதை பதிவிட்டார்.

இந்நிலையில், கடந்த 24-ம் தேதி வினோத்குமார் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த நிலையில், இவரது வீட்டின் பின்புறக் கதவு உடைக்கப்பட்டு, 118 பவுன் நகைகள் திருடப்பட்டன.

இதையடுத்து கொள்ளையர்களைப் பிடிக்க கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. அன்சுல் நாகர், டிஎஸ்பி பிரகாஷ் தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

<div class="paragraphs"><p>யூடியூபர் மதுமிதா</p></div>

யூடியூபர் மதுமிதா

அதையடுத்து, மதுமிதாவின் வீடு முதல் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வரை 160 சிசிடிவி கேமராக்கள் மற்றும் பல ஆதாரங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

அதன் அடிப்படையில், இத்திருட்டில் ஈடுபட்ட ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த சின்னத்துரை என்பவரின் மகன் இசக்கி பாண்டி(30), முக்கூடலைச் சேர்ந்த முருகன் (28) ஆகியோர் அடையாளம் காணப்பட்டனர். இருவரும் கன்னியாகுமரி அருகே எறும்புக்காடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில், ஆலங்குளத்தைச் சேர்ந்த முருகேசன் (30), திம்மராஜபுரம் தங்கப்பாண்டி (39) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 4 பேரிடம் இருந்து, 98 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. கைதானவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

<div class="paragraphs"><p>நகை கொள்ளையில் கைது செய்யப்பட்டவர்கள். (உள்படம்)&nbsp;யூடியூபர் மதுமிதா</p></div>
சுருக்குமடி வலையை மீனவர்கள் எடுத்துச்செல்ல தமிழக அரசு அனுமதி அளிக்காதது ஏன்? - 2 வாரத்துக்குள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in