சென்னை: இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று (மார்ச் 3) நிகழ்கிறது. இந்திய நேரப்படி, மதியம் 3.20 முதல் மாலை 6.48 மணி வரை கிரகணம் நிகழும்.
இதில், முழு சந்திர கிரகணம் 4.34 முதல் 5.33 மணி வரை தென்படும். அப்போது, சந்திரன் சிவப்பு நிறத்தில் காணப்படும். இது ‘ரத்த நிலா’ (பிளட் மூன்) என்று அழைக்கப்படுகிறது. அந்தமான், நிக்கோபார் தீவுகளில் உள்ள சில இடங்களை தவிர, இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் சந்திர கிரகணத்தைப் பார்க்க முடியும்.
தமிழகத்தில் சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் சந்திரன் உதயத்தின்போது கிழக்கு தொடுவானில் கிரகணத்தின் இறுதி நிலைகளைக் காணலாம். சந்திர கிரகணத்தை வெறும் கண்களாலேயே கண்டு ரசிக்கலாம். அடுத்து, ஆக.28-ம் தேதி பகுதி சந்திர கிரகணம் நிகழ உள்ளதாக வானியல் அறிஞர்கள் தெரிவித்தனர்.