தமிழகம்

வடபழனியில் பிரபல வணிக வளாகத்தில் தீ

செய்திப்பிரிவு

சென்னை: வடபழனியில் திரையரங்கம், உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் பிரபலமான வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்த வணிக வளாகத்தின் முதல் தளத்தில் தனியார் உணவகம் செயல்படுகிறது.

நேற்று மதியம் 12 மணியளவில், இந்த உணவகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சமையல் அறையில் பற்றிய தீ, அடுத்த சில நிமிடங்களில் மளமளவென பரவியது.

          

தீ விபத்து ஏற்பட்டவுடன் வணிக வளாகத்தில் இருந்த தீயணைப்பு எச்சரிக்கை அலாரங்கள் ஒலித்தன. இதையடுத்து, உள்ளே இருந்த அனைவரும் அலறியடித்து வெளியேறினர்.

மற்ற தளங்களில் இருந்தவர்களையும் வணிக வளாக ஊழியர்கள் துரிதமாக வெளியேற்றினர். தீ விபத்து தொடர்பாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து, வடபழனி, கோயம்பேடு மற்றும் அசோக் நகர் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்களுடன் வீரர்கள் சம்பவ இடம் விரைந்து தீயை அணைத்தனர்.

சுமார் 30 நிமிடத்தில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த விபத்தில் உணவகத்தில் இருந்த பெரும்பாலான பொருட்கள் சேதம் அடைந் தது. அதிர்ஷ்டவசமாக யாருடைய உயிருக்கும் ஆபத்து ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT