தமிழகம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கிலோ ரூ.30-க்கு சன்ன ரக அரிசி விற்பனை: அமைச்சர் சரத்குமார் தொடங்கி வைத்தார்

செய்திப்பிரிவு

செங்கல்பட்டு: பொது​மக்​களுக்கு அத்​தி​யாவ​சி​யப் பொருட்​கள் நியாய​மான விலை​யில் கிடைப்​பதை உறுதி செய்​யும் வகை​யில், தமிழ்​நாடு அரசு சார்​பில் மலிவு விலை​யில் சன்ன ரக அரிசி விற்​பனை செய்​யப்​படு​கிறது.

இதன்​படி தனியார் அரிசி ஆலைகள் உள்​ளிட்ட ஆதா​ரங்​களி​லிருந்து கொள்​முதல் செய்​யப்​பட்ட அரிசி, கிலோ ரூ.30 என்ற விலை​யில் 5 கிலோ பைகளில் விற்​பனை செய்​யப்​படு​கிறது.

செங்​கல்​பட்டு மாவட்​டம், வண்​டலூர் அருகே ரத்​தினமங்​கலம் நியாய​விலைக் கடை​யில் நடை​பெற்ற தொடக்க நிகழ்ச்​சி​யில், மாவட்ட ஆட்சி​யர் மு.வீரப்​பன் தலை​மையில் அமைச்​சர் த.சரத்​குமார் பொது​மக்​களுக்கு அரிசியை வழங்கி விற்​பனையைத் தொடங்கி வைத்​தார்.

முதற்​கட்​ட​மாக செங்​கல்​பட்டு மாவட்​டத்​தில் 3 இடங்​களில் அரிசி விற்​பனை நடை​பெறுகிறது. ஆலந்​தூர் நங்​கநல்​லூர் முதல் பிரதான சாலை​யில் உள்ள ஜெ.ஜெ. நங்​கநல்​லூர் தொடக்​கக் கூட்​டுறவு பண்​டகசாலை, ஆதம்​பாக்​கம் கேசரி நகர் பிரதான சாலை​யில் உள்ள கஸ்தூரிபா மகளிர் நுகர்​வோர் கூட்​டுறவு பண்​டகசாலை​யின் சிறு அங்​காடிப் பிரிவு, கல்​பாக்​கம் சட்​ராஸ் பிரதான சாலை​யில் உள்ள அணுசக்​தித் துறை பணி​யாளர்​கள் கூட்​டுறவு பண்​டகசாலை ஆகிய இடங்​களில் இந்த அரி​சி கிடைக்கும்.

பொதுச் சந்​தையில் அரிசி விலை​யைக் கட்​டுப்​படுத்​தும் நோக்​கில், தமிழகம் முழு​வதும் அமுதம் மற்​றும் கூட்​டுறவு அங்​காடிகள் மூலம் கிலோ ரூ.30-க்கு சன்​னரக அரிசி விற்​பனை செய்​யும் திட்​டம் தொடங்​கப்​பட்​டுள்​ளது. இதன் தொடர்ச்​சி​யாக செங்​கல்​பட்டு மாவட்​டத்​திலும் விற்​பனை விரிவுபடுத்​தப்​பட்​டுள்​ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT