தமிழகம்

செயற்கையான முறையில் மாம்பழங்களை பழுக்க வைத்தால் ரூ.5,000 அபராதம்

செய்திப்பிரிவு

சென்னை: ​மாம்பழ சீசன் சூடு​பிடித்​துள்ள நிலை​யில், ரசாயன கற்​கள் மூலம் செயற்கை முறை​யில் மாம்​பழங்​களை பழுக்க வைக்​கும் வியா​பாரி​களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்​கப்​படும் என்று உணவு பாதுகாப்புத் துறை எச்​சரித்​துள்​ளது.

மாம்​பழம் விற்​பனை செய்​யும் கடை​யின் உரிமை​யாளர்​களுக்கு தமிழக அரசின் உணவு பாது​காப்​புத் துறை சில எச்​சரிக்​கைகளை வழங்​கி​யுள்​ளது. அதன்​படி, பொது​மக்​கள் மக்​கள் அதி​கம் விரும்பி சாப்​பிடும் நிலை​யில், உடலுக்கு தீங்கு விளைவிக்​கும் வகை​யில், செயற்கை முறை​யில் ரசாயன பொருட்​களை பயன்​படுத்தி மாம்​பழங்​களை பழுக்க வைக்​கக்​கூ​டாது.

இயற்கை முறை​யில் பழுக்க வைத்த பழங்​களை மட்​டுமே விற்​பனை செய்ய வேண்​டும். விதி​முறை​களை மீறி ரசாயனங்​களை பயன்​படுத்​தும் கடைகளில் உள்ள பழங்​கள் உடனடி​யாக பறி​முதல் செய்​யப்​படும். சம்​பந்​தப்​பட்ட கடை உரிமை​யாளர்​களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்​கப்​படும்.

அதி​காரி​கள் தீவிர ஆய்வு: தவறு செய்​யும் கடைகளின் உணவு பாது​காப்​புத் துறை உரிமம் ரத்து செய்​யப்​படும் என எச்​சரிக்​கப்​பட்​டுள்​ளது. இது தொடர்​பாக மாம்பழ மொத்த மற்​றும் சில்​லறை விற்​பனை கடைகளில் ரசாயன முறை​யில் மாம்​பழங்​கள் பழுக்க வைக்​கப்​படு​கிற​தா? என்​பது குறித்து மாவட்ட உணவு பாது​காப்​புத் துறை அதி​காரி​கள் தீவிர ஆய்வு மேற்​கொள்​ள​வும் உத்​தர​விடப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT