தமிழகம்

மீனவர்களுக்கான உதவித் தொகை ரூ.7,000 ஆக உயர்வு: தமிழக பட்ஜெட் 2026-ல் அறிவிப்பு

10,000 பெண்களுக்கு இலவச கறவை மாடுகள்

தமிழினி

சென்னை: மீனவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.7,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். இதன் மூலம், 193 லட்சம் பாரம்பரிய மீனவர் குடும்பங்கள் பயனடையும். இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக 135 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதி ஆண்​டுக்​கான (2026-27) பொது பட்​ஜெட்​டை சட்டப்​பேரவையில் இன்று நிதியமைச்​சர் மரிய வில்​சன் தாக்​கல் செய்தார். அதில், மீன்வளம் மற்றும் மீனவர்கள் நலத்துறை, பால்வள துறை தொடர்பாக வெளியான அறிவிப்புகள் விவரம்:

> பாரம்பரிய மீனவர்களுக்கு வழங்கி வரும் மீன்பிடிப் பணியில்லாக் கால உதவித்தொகை ரூ.6,000-லிருந்து ரூ.7,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். இதன் மூலம், 193 லட்சம் பாரம்பரிய மீனவர் குடும்பங்கள் பயனடையும். இதற்காக ரூ.135 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

> நவீன பதப்படுத்தும் வசதிகள் கொண்ட ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் வாங்கும் மீனவர்களுக்கு வட்டி மானியம் வடிவிலான நிதியுதவி வழங்க ரூ.12 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

10,000 பெண்களுக்கு இலவச கறவை மாடுகள்

> பால் உற்பத்தியை அதிகரிக்கவும், ஊரகப் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் ஆண்டுதோறும் 10,000 தகுதி வாய்ந்த பெண்களுக்கு இலவசக் கறவை மாடுகள் வழங்கப்படும். இதற்காக ரூ.57 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைக்கு மொத்தமாக ரூ.4,880 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT